தெலங்கானாவில் பாடசாலை பஸ்ஸுடன் ரயில் மோதி
பயங்கர விபத்து 20 மாணவர்கள் பலி
தெலங்கானா
மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லாத
ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க
முயன்ற பாடசாலை பஸ் மீது ரயில் மோதியதில் 20 மாணவர்கள்
பலியாகினர்; 19 பேர் காயமடைந்தனர்.
மேடக்
மாவட்டம் மசாய்பேட் கிராமத்தில் இன்று காலை 9.10 மணியளவில்
இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
காகடியா
டெக்னோ பாடசாலைக்குச் சொந்தமான பஸ் சுமார் 40 மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது,
மசாய்பேட் கிராமம் அருகே ஆளில்லாத
ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க
முயன்ற போது அவ்வழியாக வந்த
நான்டெட் - செகந்தராபாத் பயணிகள் ரயில் பஸ்
மீது மோதியது.
இதில்
பஸ் சாரதி, பஸ்ஸில் இருந்த 20 மாணவர்கள்
சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த 19 மாணவர்கள், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு
ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை
அளிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு
நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட
முதல்வர் சந்திரசேகர ராவ், சிறப்பான முறையில்
மருத்துவ உதவி அளிக்குமாறு உத்தரவிட்டார்.
அவருடன் தலைமைச் செயலர் ராஜீவ்
சர்மா, டிஜிபி அனுராக் சர்மா
ஆகியோரும் இருந்தனர்.
0 comments:
Post a Comment