நோன்பு இருந்தவருக்கு
உணவு திணித்தது தவறு:
அத்வானி கண்டிப்பு
ரமழான்
நோன்பு இருந்த
ஒருவரை சிவசேனை
கட்சி எம்.பி.க்கள்
வற்புறுத்தி சாப்பிட வைத்தது தவறு என
பாஜக மூத்த
தலைவர் அத்வானி
தனது கண்டனத்தை
தெரிவித்துள்ளார்.
ரமழான்
நோன்பு இருந்த
முஸ்லிம் ஒருவரை
வற்புறுத்தி சாப்பிட வைத்ததாக சிவசேனை கட்சி
எம்.பி.,க்கள் மீதான
புகார் பெரும்
சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து
பாஜக மூத்த
தலைவர் அத்வானியிடம்
கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம்
பேசிய அவர்
'இது தவறு, ஏற்றுக்கொள்ள முடியாத செய்கை' என தனது கண்டனத்தை பதிவு
செய்தார்.
டில்லி
மராட்டிய பவனில்
எம்.பிக்களுக்கு
சாப்பாடு விநியோகம்
செய்வது வழக்கம்.
இந்நிலையில் சிவசேனை கட்சியை சேர்ந்த அரவிந்த்
சாவந்த் உட்பட
11 எம்.பிக்கள்
சாப்பிடுவதற்காக மராட்டிய பவன் சென்றனர். அங்கு
கேட்டரிங் சூப்பர்வைசரான
அர்ஷத்திடம் சென்ற அரவிந்த் சாவந்த், ஒரு
சப்பாத்தியை பிய்த்து, அர்ஷத்தின் வாய்க்குள் திணிக்க
முற்பட்டார்.
இதுகுறித்து
அர்ஷத் அளித்துள்ள
புகாரில் 'எனது
சீருடை சட்டையில்
உள்ள பேட்ஜில்
அர்ஷத் என்ற
பெயர் இருந்தது.
இதை பார்த்தால்
நான் இஸ்லாமியர்
என்பது எம்.பி.க்கு
தெரிந்திருக்கும். அப்படியிருந்தும், ரமழான் நோன்பு இருக்கும் நேரத்தில்
அதை முறிக்கும்
வகையில் எனது
வாயில் சப்பாத்தியை
எம்.பி
திணித்தது, மனவேதனையை உண்டாக்கியுள்ளது'
என்று தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment