எம்.எச். விமானம் வீழ்த்தப்பட்ட
இடத்தில் விசாரணைக் குழு ஆய்வு தவறுதலாக சுடப்பட்டு
இருக்கலாம் - அமெரிக்கா
கிழக்கு
உக்ரைனில் மலேசிய
விமானம் சுட்டு
வீழ்த்தப்பட்ட இடத்தில் விசாரணைக் குழு ஆய்வு
செய்துள்ளது. விமானம் தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம்
என்று அமெரிக்கா
தற்போது தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து
நாட்டின் தலைநகர்
ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர்
கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய
ஏர்லைன்ஸ் விமானம்
எம்.எச்.17,
கடந்த 17 ஆம்
திகதி
உக்ரைனில் ரஷிய
ஆதரவு கிளர்ச்சியாளர்கள்
கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும்,
துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில்
வந்த 298 பேரும்
உடல் கருகி
பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும்,
ரஷ்ய ஆதரவு
கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர்
குற்றம் சாட்டி
வரும் வேளையில்,
சர்வதேச விசாரணை
நடத்த வேண்டும்
என்று அமெரிக்கா
உள்ளிட்ட உலக
நாடுகள் வலியுறுத்தி
வருகின்றன.
மலேசிய
விமானம் சுட்டு
வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்
தீர்மானம் கொண்டு
வரப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது
செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்,
இதற்கு அனைத்து
நாடுகளும் ஒத்துழைப்பு
அளிக்க வேண்டும்
என்று கூறும்
அந்த தீர்மானம்
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சம்பவ இடத்தில்
பாதுகாப்பாக, முழுமையாக, தடையற்று பிரவேசித்து விசாரணை
குழுவினர் விசாரணை
நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய ரஷ்ய ஆதரவு
கிளர்ச்சியாளர்கள் வழிவிட வேண்டும்
என்றும் அந்த
தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை
ரஷ்ய ஆதரவு
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக
குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரஷ்யாவும்
ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில்
விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டையும் நேற்று
டன்ட்ஸ்க் நகரில்
நடந்த பத்திரிகையாளர்கள்
சந்திப்பின்போது மலேசிய அதிகாரிகளிடம் டன்ட்ஸ்க் பிரதமர்
என்று தன்னை
அறிவித்துக் கொண்டுள்ள அலெக்சாண்டர் போரோடாய் ஒப்படைத்தார்.
மலேசிய தேசிய
பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த கர்னல் முகமது
சாக்ரி, கறுப்புப்
பெட்டிகள் இரண்டும்
நல்ல நிலையில்
இருப்பதாக தெரிவித்தார்.
இறந்தவர்கள் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது.
கிழக்கு
உக்ரைனில் மலேசிய
விமானம் சுட்டு
வீழ்த்தப்பட்ட இடத்தை அந்நாட்டு விசாரணைக் குழு
ஆய்வு செய்தது.
விமானம் வீழ்த்தப்பட்ட
பின்னர் அங்கு
சென்ற சர்வதேச
விசாரணைக் குழுவுடன்,
ஐரோப்பிய ஒன்றிய
பாதுகாப்பு கூட்டமைப்பு அதிகாரிகளும், விமானம் வீழ்த்தப்பட்ட
இடத்தை ஆய்வு
செய்தனர். விமான பாகங்கள் சிதறிக் கிடக்கும் பகுதிகளை புகைப்படம் எடுத்த விசாரணைக் குழுவினர், தடயங்களையும் சேகரித்தனர். இந்த தடயங்களும், புகைப்படங்களும் சர்வதேச வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. விமானம் வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விமானம் கிளர்ச்சியாளர்களால் தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வானில் பறந்தது சாதாரண பயணிகள் விமானம் என்று உணராமல் தவறுதலாக கிளர்ச்சியாளர்கள் அதனை சுட்டு வீழ்த்திருக்கலாம். என்று அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தற்பொழுது தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment