19 நாள் போரில்
கொல்லப்பட்ட
பாலஸ்தீனர்களின்
எண்ணிக்கை 1049 ஆக உயர்ந்தது.
இஸ்ரேல் தரப்பில் பலி
எண்ணிக்கை 42 ஆக அதிகரித்தது.
அமெரிக்கா,
ஐ.நா.
சபை கோரிக்கையை
ஏற்று நேற்று
இஸ்ரேல், காஸா
முனை இடையே
12 மணி நேர
போர் நிறுத்தம்
அமுலுக்கு வந்தது.
ஐ.நா.
சபை கோரிக்கையை
ஏற்று இஸ்ரேல்
சண்டை நிறுத்தத்தை
நீடிக்க இஸ்ரேல்
சம்மதம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்
வாலிபர்கள் 3 பேர் கடத்தி கொல்லப்பட்டதாலும், பாலஸ்தீன வாலிபர் ஒருவர் கொலை
செய்யப்பட்டதாலும், இஸ்ரேல்–காஸாமுனை
இடையே நீறு
பூத்த நெருப்பாக
இருந்த விரோதம்,
போராக உருவெடுத்தது.
இஸ்ரேல் மீது
காஸா முனை
பகுதியை ஆட்சி
செய்துவரும் ஹமாஸ் இயக்கத்தினர் (பாலஸ்தீன சன்னி
முஸ்லிம் பிரிவினர்)
ராக்கெட் வீச்சு
நடத்துகின்றனர். காஸா முனை மீது இஸ்ரேல்
வான்வழி, கடல்வழி
தாக்குதல்கள் நடத்துகின்றனர்.
கடந்த
19 நாளாக நடந்து
வருகிற இந்த
போரில், அப்பாவி
பாலஸ்தீன மக்கள்
கொல்லப்படுவது சர்வ தேச நாடுகளை துயரத்துக்கு
ஆளாக்கி உள்ளது.
மனித நேய
அடிப்படையில் இரு தரப்பினரும் தற்காலிக போர்
நிறுத்தம் செய்ய
வேண்டும் என்று
ஐ.நா.
சபையும், அமெரிக்காவும்
வலியுறுத்தின. இதை இஸ்ரேலும், ஹமாஸ் இயக்கத்தினரும்
ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து 12 மணி நேர தற்காலிக
சண்டை நிறுத்தம்
நேற்று இலங்கை
நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
காஸா முனையின்
தெற்கு பகுதியில்
இஸ்ரேல் நடத்திய
பீரங்கி தாக்குதலில்
ஒரே குடும்பத்தை
சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும், மத்திய
மற்றும் தெற்கு
காசா, காசா
நகரம் ஆகியவற்றில்
இருந்து இறந்தவர்கள்
உடல்கள் மீட்கப்பட்டு
வருகிறது. இதன்மூலம்
19 நாள் போரில்
கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை
1049 ஆக உயர்ந்தது.
இஸ்ரேல் தரப்பில்
பலி எண்ணிக்கை
42 ஆக அதிகரித்தது.
இதற்கிடேயே
இஸ்ரேல்–ஹமாஸ்
இயக்கத்தினரிடையே நிரந்தர சண்டை நிறுத்தம் ஏற்படுத்தும்
முயற்சி தொடர்ந்து
நடந்து வருகிறது.
பாரீஸ் நகரில்
நேற்று பிரான்ஸ்
ஏற்பாட்டின் பேரில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி,
இத்தாலி, ஐரோப்பிய
யூனியன், துருக்கி,
கத்தார் நாடுகளின்
அதிகாரிகள் கூடிப்பேசினர். சண்டை நிறுத்தம் நிரந்தர
முடிவுக்கு வரவேண்டுமானால் காஸா முனையில் இருந்து
இஸ்ரேல்–எகிப்து
முற்றுகை முடிவுக்கு
வரவேண்டும் என்று ஹமாஸ் இயக்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
இதேபோன்று ஹமாஸ்
இயக்கத்தினரின் எல்லை தாண்டிய சுரங்கங்களை முடிவுக்கு
கொண்டு வந்தால்தான்
நிரந்தர போர்
நிறுத்தம் என
இஸ்ரேல் கூறுகிறது.
இந்நிலையில்
உலக நாடுகள்
நிர்பந்தத்தை அடுத்து ஐ.நா. சபையின்
கோரிக்கையை ஏற்று சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க
இஸ்ரேல் சம்மதம்
தெரிவித்துள்ளது. சண்டை நிறுத்தத்தை இன்று இரவு
வரையில் நீடிக்க
இஸ்ரேல் சம்மதம்
தெரிவித்துள்ளது. ஆனால் ஐ.நா.வின்
இந்த கோரிக்கையை
ஹமாஸ் இயக்கத்தினர்
ஏற்க மறுத்துவிட்டனர்.
சனிக்கிழமை மாலையே அவர்கள் இஸ்ரேலை நோக்கி
ராக்கெட் குண்டுகளை
வீசினர் என்று
தகவல்கள் தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment