காஸாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல், ஹமாஸ் இயக்கம் ஒப்புதல்;

கெய்ரோவில் பேச்சுவார்த்தை

இன்று காலை 8 மணி முதல் அங்கு போர் நிறுத்தம் 

அமுலுக்கு வருகிறது

காஸா பகுதியில் 3 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும், பாலஸ்தீன ஹமாஸ் இயக்கமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்காஸாமுனை இடையேயான போர் கடந்த மாதம் 8ஆம் திகதி தொடங்கியது. இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். காஸாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலையும், தரைவழி தாக்குதலையும் ஒன்று சேர நடத்தியது
காஸாமுனையில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,444 ஆக உயர்ந்தது. இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள். இஸ்ரேல் 56 வீரர்களையும், பொதுமக்களில் 3 பேரையும் இழந்துள்ளது. ஹமாஸ் போராளிகள் எல்லை தாண்டிச்சென்று தாக்குதல் நடத்தப்பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளை அடுத்த சில நாட்களில் முழுமையாக தகர்த்து விடுவோம் என்று இஸ்ரேல் கூறியதுஇதற்கு ஏற்ற வகையில் காஸாமுனை மீதான தாக்குதலை உக்கிரம் அடையச் செய்கிறவிதத்தில், மேலும் 16 ஆயிரம் வீரர்களை இஸ்ரேல் களம் இறக்கியது. அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
காஸா பகுதியில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை இஸ்ரேலும், பாலஸ்தீனமும் மேற்கொள்ளவேண்டும் என்று .நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்தது.
காஸா பகுதியில் அப்பாவி மக்கள் இதுவரை கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால், சர்வதேச மனிதநல சட்டவிதிகளுக்கு உரிய மதிப்பளித்து அப்பாவி மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டும், அவர்களின் பாதுகாப்பு கருதியும் போர் நிறுத்தம் செய்யவேண்டியது மிகுந்த அவசியமாகும்.
அப்போதுதான் இப்பகுதியில் இழந்த அமைதியை மீட்க முடியும். காஸா பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளும் கிடைக்க வழி பிறக்கும். எனவே, காஸா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம் செய்வதற்கு இரு தரப்பினரும் முன்வரவேண்டும். என்று .நா. பாதுகாப்பு கவுன்சில் வேண்டுகோள் விடுத்தது.
இஸ்ரேல்காஸாமுனை இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட எகிப்து தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த வாரம் பாலஸ்தீன தூதுக்குழுவினரை சந்தித்து, போர் நிறுத்த திட்டம் ஒன்றை அளிக்கிறது.
ஆனால் காஸாமுனையில் 7 ஆண்டுகளாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், எகிப்து படைகளின் முற்றுகையை விலக்கிக்கொண்டால் மட்டுமே சண்டை நிறுத்தம் சாத்தியம் என்று ஹமாஸ் போராளிகள் திட்டவட்டமாக அறிவித்தனர்.
இந்நிலையில் காஸாவில் 3 நாட்கள் (72 மணி நேரம்) போரை நிறுத்திக் கொள்ள இஸ்ரேல் இராணுவம் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. இருதரப்பினரும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த கெய்ரோ செல்கின்றனர்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் .நா. மனித உரிமைகள் ஆணைய செயலாளர் பான் கி மூன் இணையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று காலை 8 மணி முதல் அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வருகிறது என்று கூறியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் .நா.வின் பரிந்துரையை போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் பலமாக உள்ள ஹமாஸ் இயக்கமும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் யுத்தநிறுத்தம் தொடங்கும் வரையில் இருதரப்பினரும் அமைதியாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். போர் நிறுத்த வேலையில் இரு தரப்பினரும் தமது வாக்குறுதிகளை பின்பற்ற வேண்டும். என்று அமெரிக்கா மற்றும் .நா. கேட்டுக் கொண்டுள்ளதுநீண்ட வன்முறைக்கு இடையே பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்களுக்கு இடை ஓய்வு மிகவும் அவசியமானது. இந்த போர் நிறுத்தம் அப்பாவி பொதுமக்களுக்காக கொண்டுவரப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டநிலையில் காஸாமுனை மீதான இஸ்ரேல் தாக்குதல் உக்கிரம் அடைந்ததை அடுத்து அங்கு உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டதை அடுத்து.  72 மணி நேர போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top