காஸாவில் ஷஹீதான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை
800 ஆக அதிகரிப்பு
காஸாவில்
உள்ள பாலஸ்தீனர்களின்
மீது இஸ்ரேல்
இராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலில் ஷஹீதானவர்களின்
எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது.
18-வது
நாளாக நேற்று
காஸாவின் பல்வேறு
இடங்களில் ஏவுகணை
வீச்சுகளும், குண்டுவீச்சுகளும் பாலஸ்தீனர்கள்
மீது நடத்தப்பட்டன.
நேற்றைய
தாக்குதலில் மட்டும், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் ஷஹீதாக்கப்பட்டதாக
அங்கிருக்கும் அவசரகால உதவி மையத்தின் செய்தித்
தொடர்பாளர் அஷ்ரப்-அல்-காத்ரா தெரிவித்துள்ளார்.
75 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன், 2,644
வீடுகள் பாதியளவு சேதமடைந்தன. 46 பாடசாலைகள், 56 மசூதிகள், 7 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஸா பகுதியில் கடந்த 18 நாட்களாக இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 797 பேர்கொல்லப்பட்டனர் என பிபிஸி செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை 800 யும் தாண்டியுள்ளதாக அல்-ஜஸீரா செய்தியாளர் தெரிவிக்கின்றார். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களும் பெண்களும் அடங்கிய பொதுமக்களாவர்.
கிளர்ச்சியாளர்கள்,
இஸ்ரேல் இராணுவத்தினர்
மீது நடத்திய
தாக்குதலில் 32 இஸ்ரேல் இராணுவத்தினரும், 3
பொதுமக்களும், தாய் நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு தொடக்கம் பாலஸ்தீன மண்ணில் நடத்தப்பட்டு வரும் தாக்குதலில்
தற்போது நடந்து
வரும் தாக்குதல்
மிகவும் மோசமானதாக
கருதப்படுகிறது. இந்த போரில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், சிறுவர்கள்,வயோதிபர்கள்
மற்றும் பெண்கள்
என பாலஸ்தீனத்தில்
செயல்பட்டு வரும் தன்னார்வு நிறுவனம் ஒன்று
தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment