மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு


பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான கிளாஸ்கோ ஸ்மித்க்லைன் பார்மாச்சூட்டிக்கல்ஸ் மலேரியாவிற்கான எதிர்ப்பு மருந்தை தயாரித்துள்ளது.
ஆர்.டி.எஸ்.-எஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை ஆப்பிரிக்காவிலுள்ள மலேரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
கொசுக்களின் மூலம் பரவும் கொடிய காய்ச்சல் நோயான மலேரியாவால் ஆப்பிரிக்காவின் மிகவும் ஏழ்மையான பகுதியான சஹாரனில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் பேர் பலியாகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஜி.எஸ்.கே தயாரித்துள்ள ஆர்.டி.எஸ்.-எஸ். மருந்து ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே பயன்படுத்துவதால் .நாவின் உலக சுகாதார மையம் மற்றும் ஐரோப்பிய மெடிசின்ஸ் ஏஜென்சியின் தரச்சான்று அனுமதி பெற்ற பின்பே உபயோகத்திற்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்படுகின்றது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் அறிஞர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சி, கடும் உழைப்பினால் தற்போது இந்த மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.கே நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய மெடிசின்ஸ் ஏஜென்சி இந்த மருந்திற்கு உரிமம் தந்துவிட்டால் 2015 ஆம் ஆண்டிற்குள் உபயோகத்திற்கு கொண்டு வர பரிந்துரை செய்யப்படும் என உலக சுகாதார மையம் ஏற்கனவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top