இந்தியாவிலுள்ள
மகாராஷ்டிர மாநிலத்தில்
நிலச்சரிவில்
புதைந்து 160 பேர் பலி?
இதுவரை 41 சடலங்கள்
மீட்பு
இந்தியாவிலுள்ள
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று முன்தினம் புதன் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மண்மேடுள்ள
புனே மாவட்ட
கிராமத்திலிருந்து இதுவரை 41 பேரின்
சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காயம் அடைந்த
நிலை யில்
8 பேரை மீட்புப்
படையினர் காப்பாற்றியுள்ளனர்
என அறிவிக்கப்படுகின்றது.
நிலச்சரிவினால்
பெயர்ந்து விழுந்த
பாறைகள், மண்
சேற்றில் மலை
அடிவாரப் பகுதியில்
அமைந்துள்ள மாலின் கிராமம் மண்மேடிட்டுள்ளது. 44 வீடுகள் புதையுண்டுவிட்டன. இதில் சிக்கியுள்ளதாக
அஞ்சப்படும் இன்னும் 160 பேரை உயிருடன் காப்பாற்றும்
வாய்ப்பு இல்லாமலாகிவிட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த
கிராமத்தில் நிலச் சரிவு ஏற்பட்டு 24 மணி
நேரம் கடந்த
நிலையில் 14 பெண்கள், 4 குழந்தைகள் உள்ளிட்ட 41 பேரின்
சடலங்கள் புதைவிலிருந்து
புதன்கிழமை இரவு அகற்றப்பட்டதாக தேசிய பேரிடர்
மீட்புப்படை வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர் பிருத்விராஜ்
சவாண் தெரிவித்த
தகவல்படி புதையுண்டதாக
கருதப்படும் 160 பேரில் இன்னும் 115 பேர் நிலச்சரிவில்
புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, மழை
நீடிப்பதால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment