காஸா மீதான போருக்கு பழிவாங்க மும்பை நகரில் தாக்குதல் நடத்துவோம்
போராட்ட அமைப்பின் மிரட்டலால் பாதுகாப்பு அதிகரிப்பு
போராட்ட அமைப்பின் மிரட்டலால் பாதுகாப்பு அதிகரிப்பு
காஸா
மீதான போருக்கு
பழிவாங்கும் நடவடிக்கையாக மும்பை நகரில் தாக்குதல்
நடத்துவோம் என்று மும்பை பொலிஸ் கமிஷனருக்கு
போராட்ட அமைப்பு சார்பில் மிரட்டல் கடிதம் அனுப்பி
இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நாட்டின்
நிதி தலைநகர்
என்ற பெருமைக்குரிய
மும்பை சமீப
காலங்களில் பல்வேறு தாக்குதல்களை சந்திக்க நேர்ந்தது.
குறிப்பாக 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த
குண்டு வெடிப்பு
தாக்குதலில் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 700 பேர் படுகாயம் அடைந்தனர். 2008–ம்
ஆண்டு கடல்
மார்க்கமாக நுழைந்த பாகிஸ்தான்போராளிகள்
நடத்திய தாக்குதலில்
164 பேர் பலியானார்கள்.
600–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுபோன்ற
சம்பவங்களால் மும்பையில் மீண்டும் எப்போது தாக்குதல்
நடக்குமோ என்ற
பீதியிலேயே மக்கள் வாழ்ந்து வர வேண்டிய
கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்த
நிலையில் மும்பை
பொலிஸ் கமிஷனர்
ராகேஷ் மரியா
முகவரிக்கு மிரட்டல் கடிதம் வந்து இருக்கும்
தகவல் வெளியாகி
பரபரப்பு ஏற்பட்டு
உள்ளது. தபால்
மூலம் அனுப்பப்பட்ட
அந்த கடிதம்
கடந்த வெள்ளிக்கிழமை
பொலிஸ் கட்டுப்பாட்டு
அறைக்கு வந்து
சேர்ந்தது. உடனடியாக அந்த கடிதம் ராகேஷ்
மரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த கடிதத்தை அவர்
பிரித்து படித்தார்.
அதில், காஸா
மீது இஸ்ரேல்
இராணுவம் நடத்தி
வரும் தாக்குதலுக்கு
பழிவாங்க மும்பை
நகரில் தாக்குதல்
நடத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹிந்தியிலும்,
ஆங்கிலத்திலும் ஒரு பக்க அளவுக்கு எழுதப்பட்டு
உள்ளது. குறிப்பாக,
‘‘காஸா தாக்குதலுக்கு பழிவாங்குவோம், 1993–ல் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த தடவை வாய்ப்பு வழங்கப்படாது. முடிந்தால் நிறுத்தி பாருங்கள்’’ என்று குறிப்பிடப்பட்டு
உள்ளது.
இந்திய
முஜாகிதீன் போராட்ட அமைப்பு செயல்பட்டு
வரும் நிலையில்,
இந்த கடிதத்தில்
‘முஜாகிதீன்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் இந்திய முஜாகிதீன்
போராளிகள் தான்
இந்த கடிதத்தை
அனுப்பி இருக்க
வேண்டும் என்று
மும்பை பொலிஸார் சந்தேகிக்கிறார்கள்.
இந்த
மிரட்டல் கடிதத்தை
தொடர்ந்து மும்பை பொலிஸார் உஷார்படுத்தப்பட்டு
உள்ளனர். முக்கிய
ரயில் நிலையங்கள்,
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் பொலிஸாரின்
கண்காணிப்பு வளையத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.
இதுபற்றி
பொலிஸ் கமிஷனர்
ராகேஷ் மரியாவிடம்
கேட்டபோது, ‘‘இந்த கடிதத்தின் உண்மை தன்மை
பற்றி பரிசோதித்து
வருகிறோம். ஆனாலும் மிரட்டலை சாதாரணமாக எடுத்து
கொள்ளவில்லை. குற்றப்பிரிவு பொலிஸாரும், அனைத்து பொலிஸ்
நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன’’
என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment