காஸா போர் குறித்து பேசுகையில்
கதறி அழுத ஐ.நா. அதிகாரி

காஸா போர் குறித்து பேசுகையில் .நா.மனித உரிமைகள் ஆணைய அதிகாரி கிறிஸ் கன்னேஸ் கதறி அழுதார்.
 இஸ்ரேல்காஸாமுனை இடையிலான போர் 25 வது நாளை எட்டியுள்ளது. காஸா முனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறதுநேற்று வடக்கு காஸா முனையில் ஜெபல்யா என்ற இடத்தில் உள்ள வீடுகள், பாடசாலை என்பனவற்றின்மீது இஸ்ரேல் பீரங்கித்தாக்குதலையும், வான்வழி தாக்குதலையும் கண்மூடித்தனமாக நடத்தியது. காஸாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 1360 பாலஸ்தீனர்கள் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர்.. இஸ்ரேலைப் பொருத்தமட்டில் 53 வீரர்களும், பொதுமக்களில் 3 பேரும் என மொத்தமாக 56 பேர் கொல்லப்பட்டனர்.
இரு தரப்பினருக்கு இடையே நிரந்தர போர் நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. .நா. இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளது. .நா. சபை நடத்துகிற பாடசாலையின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமும் அடைந்தனர். 5 .நா. ஊழியர்களும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கன்னேஸ் கதறி அழுதார். அவர் பேச முடியாமல் தவித்தார். என் உணர்வுகளை, காஸாவில் மக்கள் எதிர்கொள்ளும் பெரும் துயரங்களுடன் ஒப்பிட முடியாது. இஸ்ரேல் படையின் அறிவிப்பை அடுத்துதான் மக்கள் முகாம்களுக்கு வருகின்றனர் என்று கூறியுள்ள அவர் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருப்பிடங்கள்யின்றி அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே கிறிஸ் கன்னேஸை அங்கியிருந்து நீக்க வேண்டும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. அவருடைய கருத்துக்கள் அனைத்து ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக உள்ளது என்று கூறி அவரை அங்கியிருந்து நீக்க வேண்டும் என்று .நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top