காணாமல் போய்
விட்டதாக கூறப்பட்ட இஸ்ரேல் வீரர்
காஸா முனையில்
பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இஸ்ரேல்
நாட்டுக்கும், காஸாமுனையை ஆட்சி செய்து வரும்
ஹமாஸ் போராளிகளுக்கும்
இடையேயான சண்டை
நேற்று 15–வது
நாளாக நீடித்தது. காணாமல் போய்
விட்டதாக கூறப்பட்ட
இஸ்ரேல் வீரர்
ஒருவர் காஸா
முனையில் பிணமாகக்
கண்டெடுக்கப்பட்டார்.
காஸா
முனையில் நேற்று
ஒரு ஆஸ்பத்திரி
மீது இஸ்ரேல்
குண்டு வீச்சு
நடத்தியது. இதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர்.
70 பேர் காயம்
அடைந்தனர். பல டாக்டர்களும் காயம் அடைந்துள்ளதாக
பாலஸ்தீன சுகாதார
அமைச்சகம் கூறியது.
மத்திய
காஸாவில், டெயிர்
எல் பாலா
என்ற இடத்தில்
ஒரே குடும்பத்தை
சேர்ந்த 4 பெண்கள்,
இஸ்ரேல் தாக்குதலில்
நேற்று உயிரிழந்தனர்.
இவர்களையும்
சேர்த்து இஸ்ரேல்
நடத்திய தாக்குதல்களில்
இதுவரை பலியான
பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 633 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில்
பெரும்பாலோர் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட
அப்பாவி பொதுமக்கள்.
3 ஆயிரத்து 640 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதேவேளை,இஸ்ரேல்
தரப்பில் பலி
எண்ணிக்கை 30 ஆகி உள்ளது.
காணாமல்
போய் விட்டதாக
கூறப்பட்ட இஸ்ரேல்
வீரர் ஒருவர்
காஸா முனையில்
பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
சண்டை நிறுத்தத்துக்கான அறிகுறிகள் தெரியாவிட்டாலும் கூட, தற்போது எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment