மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர் ஹக்கீமை விலக சொல்வது ஏன்..?
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல்
ஹக்)
"விரும்பினால் நீங்கள் வெளியேறலாம்"என ஜனாதிபதி மஹிந்த ராஜ
பக்ஸ அண்மையில்
நடைபெற்ற அமைச்சரவை
கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம்,அமைச்சர் நவீன்
திஸாநாயக்க இடமும் கூறியதாக கொழும்பு ஊடகம்
ஒன்று தகவல்
வெளியிட்டுள்ளது.
மேலும்,தான் விலக்குவதற்கு
முன்பு தாங்கள்
இராஜினாமா செய்யுமாறும்
கூறியுள்ளார்.
ஜனாதிபதியின்
இக் கூற்றிற்கு
வித்திட்ட காரணிகள்
எதுவாத இருக்கும்?என யூகித்து
பார்க்கும் போது பலவிதமான எண்ணங்கள் உள்ளங்களில்
உதிக்கின்றன.
அண்மையில்
ஜாதிக ஹெல
உருமய,பொது
பல சேன
அமைப்பு போன்றன
அமைச்சர் ஹக்கீமை
விமர்சித்து கொண்டிருப்பது மாத்திரமல்லாது
அவரை அரசாங்கத்திலிருந்து
வெளியேற்றவும் வேண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன.
இவர்களின்
இக் கோரிக்கைகளுக்கு
பதிலளிக்க,தான்
உங்களிற்கு எதிரானவன் அல்ல,உங்கள் கோரிக்கைகளில்
தான் கரிசனை
கொண்டுள்ளேன் என நிரூபித்து தன் மீது
எதிர்ப்பை இவ்
அமைப்புக்களிடமிருந்து சம்பாதிக்காமல் தடுக்க
இவ்வாறு கூறியிருக்கலாம்.
ஏனெனில்,எதிர்வரும் ஜனாதிபதி
தேர்தல் ஜனாதிபதிக்கு
மிக முக்கியமான
ஒன்றாக இருப்பதால்
"சிறு துரும்பும் பல்லுக்குற்ற உதவும்"என்ற
பழமொழிக்கு ஒப்ப சிறு அமைப்பிடமிருந்தும் ஜனாதிபதி எதிர்ப்பை சம்பாதிக்காமலேயே தனது எதிர்காலச் செயற்பாட்டை அமைப்பார்.
அல்லது,ஜனாதிபதிக்கு மிகப்
பெரிய அழுத்தத்தை
உலக அரங்கில்
அமைச்சர் ஹக்கீமின்
செயற்பாடுகள் அமைத்து வருவதால் மெல்லவும் முடியாது,
துப்பவும் முடியாது
என்ற நிலைக்கு
தள்ளப்பட்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ விரக்தியின்
உச்சத்தில் இக் கருத்தை கூறியிருக்கலாம்.
எது?எவ்வாறு?இருப்பினும்
அமைச்சர் ஹக்கீம்
ஏன் ஜனாதிபதியை
எதிர்கிறார்?என்ற வினாவை எழுப்பி விடை
பெற எத்தனிப்போமேயானால்
"அது அமைச்சர்
ஹக்கீம் முஸ்லிம்களின்
பிரச்சினையை சர்வதேசம் கொண்டு சென்றமைக்கே என்ற
பதிலைப் பெறலாம்.
இதனை
யாருக்காக அமைச்சர்
ஹக்கீம் செய்தார்?
எமக்காக அல்லவா?
எனவே,அமைச்சர்
ஹக்கீம் வெளியேற்றப்
பட்டால் முழு
முஸ்லிம் சமூகத்தையும்
ஜனாதிபதி வெளியேற்றியதாகவே
கருத வேண்டும்.அவருக்கு அதனால்
ஏற்படப்போகும் அவமானம் முழு இலங்கை முஸ்லிம்
சமூகத்திற்கும் ஏற்படும் அவமானமாகவே கருத வேண்டி
உள்ளது.
அப்படிக்
கருதாமல் அமைச்சர்
ஹக்கீமை விமர்சிக்க
துடிப்பவன் முஸ்லிம் சமூகத்தின் துரோகியாகவே பார்க்கப்படுவான்.
எமக்காக போராடிக்
கொண்டிருக்கும் அமைச்சர் ஹக்கீமிற்கு அல்லாஹ் நீண்ட
ஆயுளை நஸீப்
ஆக்குவானாக!
0 comments:
Post a Comment