இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில்

தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த  ஒரு பதிவு.

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி வரும் கடிதங்கள் குறித்து  அந்தப் பதிவிற்கு தலைப்பு ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. (How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi?)
ஷெனாலி டி வடுகே என்பவர் எழுதியுள்ள அந்தப் பதிவின் சாரம்சம்: "இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு கவுன்சிலில் கலந்து கொள்ள வந்த சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட இந்திய குழுவினர், இந்தியா - இலங்கை உறவில் தமிழ்நாடு குறுக்கீடு இருக்காது என தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தெரிவித்த கருத்துகளை வைத்து பார்க்கும்போது, தமிழக மீனவர்கள் அவர்கள் கடல் எல்லையில் மீன் வளம் இல்லாததால் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறுகின்றனர் என்பதை ஜெயலலிதா மறுக்க முடியாது என்பது உறுதியாகிறது.
எனவே இலங்கையை குற்றம்சாட்டி மோடிக்கு கடிதம் எழுதும் தந்திரத்தை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜெயலலிதா ஆட்டுவித்த மாதிரி எல்லாம் ஆட மோடி ஒன்றும் அவரது கைப்பாவை இல்லை என்பதை ஜெயலலிதா தெரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை.
கடித தந்திரத்தை கைவிட்டுவிட்டு மோடி வலியுறுத்துவது போல் யதார்த்த நிலையை உணர்ந்து அரசாட்சி செலுத்துவது ஜெயலலிதாவுக்கு நல்லது. இந்திய கடலில் மீன்வளம் குறைந்துவிட்டால் அண்டை நாட்டுக் கடலில் அத்துமீறி மீன்பிடிக்கலாம் என்பது அர்த்தமில்லை. மாறாக, ஜெயலலிதா தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்".
இவ்வாறு விவரிக்கப்பட்ட அந்த பதிவின் கீழ் ஒரு பொறுப்புத்துறப்பு வாக்கியமும் இணைக்கப்பட்டுள்ளது. (-The Ministry of Defence bears no responsibility for the ideas and opinion expressed by the numerous contributors to the “Opinion Page” of this web site-)

இந்த இணையதளத்தின் கருத்துப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள கருத்துகள், யோசனைகளுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top