வங்காள தேசத்தில் 250 பயணிகளுடன் சென்ற படகு
நீரில் மூழ்கியது

வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவின் தென்பகுதியில் உள்ள பத்மா ஆற்றில் 250 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று முன்சிகஞ்ச் என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கியது. இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்தது. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் சென்று உள்ளனர்.   இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் நீந்தி கரையை அடைந்து உள்ளனர் என  வங்காள தேச நீர் போக்குவரத்து துறை கூறி உள்ளது.
அந்நாட்டில் பெருவாரியான் ஏழை மக்கள்  ஆற்றுப் பகுதிகளை அன்றாடம் படகுகள் மூலம் கடந்து சென்று தங்களின் பிழைப்பை நடத்தி வருகின்றனர்இது போன்ற விபத்துக்களை அவர்கள் அன்றாடம் சந்திக்க நேரிடுகிறது.

அளவுக்கு அதிகமான பயணிகளை படகுகளில் ஏற்றி செல்வதாலேயே இந்த விபத்து நடைபெறுகிறது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top