பாலஸ்தீனம் மீதான தாக்குதலை கண்டித்து
வெள்ளை மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
பாலஸ்தீனம்
மீதான இஸ்ரேல்
இராணுவத்தின் தாக்குதலை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் அமெரிக்கா வின் வெள்ளை மாளிகை
முன்பு திரண்டு
ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலஸ்தீனத்தில் உள்ள காசா
நகரத்தின் மீது
கடந்த 3 வாரங்களுக்கும்
மேலாக இஸ்ரேல்
இராணுவம் வான்வழி
மற்றும் தரைவழி
தாக்குதல் நடத்தி
வருகிறது. இதில்
1800 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். போர்நிறுத்தம் செய்யுமாறு,
பாலஸ்தீனம், எகிப்து மற்றும் ஐ.நா. விடுத்த வேண்டுகோளை
இஸ்ரேல் ஏற்கவில்லை.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில், காசாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தஞ்சம்
அடைந்திருந்த ஐ.நா. முகாம் மீது
இஸ்ரேல் இராணுவம்
நடத்திய ராக்கெட்
தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10 பேர் பலியாகினர். இதில் பெரும்பாலானோர்
குழந்தைகள். இதற்கு ஐ.நா. பொது
செயலாளர் பான்கீ
மூன் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின்
இந்த கொடூர
தாக்குதலை கண்டித்து
உலகம் முழுவதும்
கண்டன குரல்கள்
எழுந்துள்ளன. நேற்று பிரான்சில் உள்ள பாரீஸ்
நகரத்தில் இஸ்ரேலின்
தாக்குதலை கண்டித்து
ஆயிரக்கணக்கானோர் மெளன பேரணி நடத்தினர். அதே
போல், அமெரிக்காவில்
வெள்ளை மாளிகை
நோக்கி ஆயிரக்கணக்கானோர்
ஊர்வலமாக வந்து
ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையொட்டி வெள்ளை மாளிகையை
சுற்றியுள்ள பல்வேறு சாலைகளையும் பொலிஸார் சீல்
வைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள்
பேருந்துகளிலும், வெகுதூரம் நடந்தும் வெள்ளை மாளிகை
முன்பாக திரண்டனர்.
‘குழந்தைகளை கொல்வது போர்குற்றம், இஸ்ரேல் நடத்துவது
இனப்படுகொலை, பாலஸ்தீனத்தை விடுவி, இஸ்ரேலுக்கு உதவுவதை
அமெரிக்கா நிறுத்த
வேண்டும்’ உள்ளிட்ட
வாசகங்களை தாங்கிய
அட்டைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம்
எழுப்பினர். இதனையடுத்து வெள்ளை மாளிகை முன்பு
பலத்த பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment