காஸாவில்
72 மணிநேர போர் நிறுத்தம்;
எகிப்து திட்டத்தை
ஏற்றுக் கொண்டது இஸ்ரேல்
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான எகிப்து முன்வைத்த
திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது என்று இஸ்ரேல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இஸ்ரேல்
– காஸாமுனை இடையே கடந்த மாதம் 8 ஆம்
திகதி தொடங்கிய
சண்டை உக்கிரம்
அடைந்தது. இரு
தரப்பினரும் தாக்குதலை தொடர்ந்தனர். இந்த சண்டையில்
அப்பாவி பாலஸ்தீன
மக்கள் பலியாவது
தொடர்கதை ஆகி
வருவது சர்வதேச
சமுகத்தை உலுக்கியது.
காஸாமுனையின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள
ரபா நகரில்
ஐ.நா.
சபை நடத்தி
வருகிற பள்ளிக்கூடத்தின்மீது
இஸ்ரேல் குண்டு
வீச்சு நடத்தியது.
இந்த தாக்குதலில்
10 பேர் பரிதாபமாக
உயிரிழந்தனர். இங்குதான் போரினால் இடம் பெயர்ந்த
மக்களுக்கு ஐ.நா. அடைக்கலம் கொடுத்து
வந்தது. இந்த
தாக்குதல் உலக
நாடுகளை அதிர்ச்சியில்
ஆழ்த்தி உள்ளது.
இதுவரையில்
கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை
1,800 ஐ தாண்டியது.
இந்நிலையில் நேற்று இஸ்ரேல் 7 மணி நேர
போர் நிறுத்தத்தை
அறிவித்தது. நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுவதற்காக
ஐ.நா.
சபை தீவிர
முயற்சி மேற்கொண்டது.
இப்பிரச்சினையில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும்
இடையே சமரசம்
செய்துவைப்பதற்கான பணிகளில் எகிப்து
நாடும் ஈடுபட்டது.
தற்போது எகிப்து
முன்வைத்த போர்நிறுத்த
திட்டத்தை ஏற்றுக்
கொண்ட இஸ்ரேல்
72 மணி நேர
போர் நிறுத்தத்திற்கு
சம்மதம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கமும்
போர்நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
இன்று காலை
8 மணி தொடக்கம்
அங்கு இந்த போர்நிறுத்தம் அமுலுக்கு
வருகிறது. போர்
நிறுத்த உடன்பாட்டுக்கு
இஸ்ரேல் மற்றும்
ஹமாஸ் இயக்கம்
மதிப்பளிக்க வேண்டும் என்று எகிப்து கேட்டுக்
கொண்டுள்ளது. மேலும், எகிப்து தலைநகர் கெய்ரோவில்,
இஸ்ரேல்-காஸா
முனை இடையே
நிரந்தர சண்டை
நிறுத்தம் செய்வதற்கான
முயற்சிகள் சூடு பிடித்துள்ளது.
0 comments:
Post a Comment