இணையதளத்தில் ஜெயலலிதாவை அவமதித்த விவகாரம்

இலங்கை தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கண்டனம்

இணையதளத்தில் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை அவமதித்து  கட்டுரை வெளியிட்ட விவகாரத்தில் இலங்கைக்கு இந்திய கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கை தூதர் சுதர்சன் சேனரத்தன இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேரில் அழைத்து வரவழைக்கப்பட்டார். அவரிடம் இலங்கை விவகாரங்களை கவனிக்கும் வெளியுறவுத்துறை இணை செயலர் சுசித்ரா துரை இந்தியாவின் கண்டனத்தை தெரிவித்தார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை  இணையதளத்தில் ஜெயலலிதா கட்டுரை  விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் கண்டனத்தை முறைப்படி மத்திய அரசு பதிவு செய்வதாக கூறிய இணைச்செயலர் இத்தகைய செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என இலங்கை அரசிடம் கூறும் படி எச்சரித்தார் எனவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியாவின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் மத்திய அரசு பதிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் சையது அக்பருதீனும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top