புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவகத்தின் கிளை
மன்னார்
மூர் வீதியில் திறந்து வைப்பு
கைத்தொழில்
மற்றும் வாணிப
அமைச்சின் கீழுள்ள புடவைகள் மற்றும்
ஆடைகள் நிறுவகத்தின்
கிளையொன்று மன்னார் மாவட்டத்தின் மன்னார் மூர் வீதியில்
திறந்து வைக்கப்பட்டது.
கைத்தொழில்
மற்றும் வாணிப
அமைச்சர் றிஷாத்
பதியுதீன் பிரதம
அதிதியாக கலந்து
கொண்டு இதனை
சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.
வன்னி
மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், மன்னார் மாவட்ட
அரசாங்க அதிபர்
எம்.வை.எஸ்.தேசபிரிய,
வடமாகாண சபை
உறுப்பினர் றிப்கான் பதியுதீன், புடவைகள் மற்றும்
ஆடைகள் நிறுவகத்தின்
பணிப்பாளர் நாயகம் நவாஸ் முஸ்தபா, மன்னார்
நகர சபை
தலைவர் எஸ்.ஞானபிரகாசம், அமைச்சரின்
மாவட்ட இணைப்பாளர்
என்.எம்.முனவ்வர் உட்பட
பலர் கலந்து
கொண்டனர்.
இதற்கான
நிதியுதவியை கொய்க்கா நிறுவனம் வழங்குகின்றது. மன்னார்
மாவட்டத்தில் ஆடை உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும்
வேலையற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை
பெற்றுக் கொடுக்கும்
வகையில் வடமாகாணத்தில்
புடவைகள் மற்றும்
ஆடைகள் நிறுவகத்தின்
முதலாவது கிளை
திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயிற்சி ஆசிரியர்கள் 30 பேருக்கு தற்காலிக நியமனக் கடிதங்களை அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் வழங்கினர்.
0 comments:
Post a Comment