பிரபல தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த்
விஷம் குடித்து தற்கொலை!
பிரபல தொலைக்காட்சி நடிகரான சாய்பிரசாந்த் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இவரது நண்பர்கள் மற்றும் பொலிஸார் கதவை உடைத்து இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது..
சென்னை
வளசரவாக்கத்தை சேர்ந்தவர் சாய்பிரசாந்த் (வயது 30). இவர்
நேரம், தெகிடி,
வடகறி உள்ளிட்ட
சில தமிழ்
சினிமா படங்களில்
துணை நடிகராக
நடித்தவர். மேலும் அவர் இளவரசி, செல்வி,
அண்ணாமலை உள்ளிட்ட
சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
நேற்று
சின்னத்திரையின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
சென்னை சாலி
கிராமத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு அவர்
வரவில்லை. இந்த
நிலையில் குடும்பத்தகராறு
காரணமாக சாய்பிரசாந்த்
நேற்று வளசரவாக்கத்தில்
உள்ள தனது
வீட்டில் விஷம்
குடித்து தற்கொலை
செய்து கொண்டதாக
கூறப்படுகிறது. இவர் கடந்த வருடம் காதல்
திருமணம் செய்து
கொண்டார் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment