கொழும்பிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும்

அதிகளவான மழைவீழ்ச்சி


கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 136 தசம் 3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் களுத்துறை மாவட்டத்தில் 112 தசம் 2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த காலங்களில் வரட்சியினால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்த அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஒரு மில்லிமீற்றருக்கும் குறைவாக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு இந்த மழை வீழ்ச்சி போதுமானதாக காணப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top