முதல்வரின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க
அப்போலோ மருத்துவமனை சென்ற ரஜினிகாந்த்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனை சென்றார். முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். ரஜினியுடன் அவரின் மகள் ஐஸ்வர்யாவும் உடன்சென்றிருந்தார்.
உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து பல் வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து செல்கின்றனர்.
0 comments:
Post a Comment