வடக்கு,கிழக்கு பற்றிய முதலமைச்சரின் கூற்று
முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது
அமைச்சர்
ஹக்கீம் ஐ.தே.கவின்
மே தின
கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு முஸ்லிம்களுக்கு பாதகாமான
வகையில் அமையும்
என்ற நிலை
இருந்தும் புதிய
அரசியலமைப்பை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என
கோரிக்கை விடுத்திருந்தார்.நேற்று நியூஸ்
பெஸ்டில் வெளியான
ஒரு காணொளியை
பார்த்த போது
கிழக்கு முதலமைச்ச
நஸீர் அஹமத்
வடக்கு-கிழக்கு
இணைக்காமல் இழுத்தடிப்பது
மிகவும் கவலையான
விடயம் போன்று
பேசியுள்ளார்.இதனையெல்லாம் இவர்கள் அறிந்து பேசுகிறார்களா?
அல்லது அறியாமல்
பேசுகின்றார்களா? என்றே தெரியவில்லை.இலங்கை முஸ்லிம்கள்
பெரும் விலைக்கு
கூறி விற்கப்பட்டுள்ளார்கள்
என்பதே உண்மை.
அக்
குறித்த காணொளியில்
கூறப்பட்ட விடயம்
(எந்த வித
திரிவு படுத்தலுமின்றி)
“முப்பது
வருடகாலத்திற்குள் வடக்கு,கிழக்கை
இணைத்த போது
கூட முஸ்லிம்கள்
எந்த ஒரு
குரலும் எழுப்பவில்லை.நிலத்தொடர்பற்ற ஒரு
அலகை பற்றி
மறைந்த தலைவர்
கதைத்திருக்கின்றார்கள்.பிரித்த போதும்
ஒன்றும் சொல்லவில்லை.நீங்கள் தானே
பிரித்திங்க.நீங்கதான் இணைத்திங்க.என்னன்னான ஒண்ட
செய்ங்கோ.இன்று
முஸ்லிம்களும் ஆலோசனை கேட்பதும்,தமிழ் மக்களுடன்
ஆலோசனை கேட்டு
முப்பது வருடத்தை
கடத்தி விட்டீர்கள்.நீங்கள் என்ன
தெரிவு எண்டாலும்
தெளிவான தீர்வை
முன்னுக்கு வைங்கோ,அது,இந்த இணைப்பு
பிரிப்பு என்ற
வார்த்தைகளால் முஸ்லிம்களை பிரிக்க வேண்டிய அவசியமில்லை.நீங்கள் தெளிவான
தெளிவான நிலைப்பாட்ட
மத்திய அரசு
வைக்க வேண்டிய
தேவை உள்ளது.நாங்கள் முஸ்லிம்
சமூகம் பல
விட்டு கொடுப்புக்களை
செய்து.ஏதாவது
ஒரு உடன்பாட்டுக்கு
வர முடியும்
என்பதில் தெளிவாக
இருக்கின்றோம்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும்
கௌரவ இரா
சம்பந்தன் ஐய
மீதும் நம்பிக்கை
வைத்துள்ளோம்.இவ்வருடத்திற்குள் ஒரு தெளிவான தீர்வை
சொல்ல வேண்டும்”
//////////முப்பது வருடகாலத்திற்குள் வடக்கு,கிழக்கை
இணைத்த போது
கூட முஸ்லிம்கள்
எந்த ஒரு
குரலும் எழுப்பவில்லை.நிலத்தொடர்பற்ற ஒரு
அலகை பற்றி
மறைந்த தலைவர்
கதைத்திருக்கின்றார்கள்.பிரித்த போதும்
ஒன்றும் சொல்லவில்லை.////////
இணைந்த
வடக்கு,கிழக்கு
மாகாண சபையில்
முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை.மு.காவின் மாகாண
சபை பிரதிநிதிகள்
ஒழுங்காக மாகாண
சபைக்கு கூட
சென்றிருக்கவில்லை.ஆரம்பத்தில் மர்ஹூம்
அஷ்ரப் இணைந்த
மாகாண சபைத்
தேர்தலில் போட்டியிடும்
மனோ நிலையில்
கூட இருந்திருக்கவில்லை.பின்னர் அதில்
போட்டியிட்டதன் பின்னால் சில பண கொடுக்கல்
வாங்கல் கதைகள்
உலா வருகின்றன.
இணைந்த வடக்கு,கிழக்கு மாகாண
அமைச்சர் அதாவுல்லா
வடக்கு,கிழக்கை
பிரிக்க பல்வேறு
தடவைகள் பாராளுமன்றத்தில்
குரல் எழுப்பியுள்ளார்.வடக்கும் கிழக்கும்
இணைக்கப்பட்டதன் பின்னர் வேறு வழி இல்லாமையினால் தான் முஸ்லிம்களுக்கான தனியான அலகு சிந்தனை என்பதே
தோற்றம் பெற்றது.இன்றும் குறித்த
வடக்கு,கிழக்கு
இணைப்பு முஸ்லிம்களிடையே
அடிமை சாசனமாக
வர்ணிக்கப்படுகிறது.இவ்வாறிருக்க எவ்வாறு
இவ்வாறு கூற
முடியும்?
/////நீங்கள் தானே பிரித்திங்க.நீங்கதான்
இணைத்திங்க.//////
ஜே.ஆர் தலைமையிலான
இலங்கை அரசு
வடக்கு,கிழக்கை
இணைத்தது என்பதை
விட இந்திய
அரசின் நிர்ப்பந்தத்தாலேயே
அதனை இணைத்தது
என்பது என்பது
யாவருக்கும் தெரியும்.ஜே.ஆர் அரசு
சில காலங்களின்
பிறகு வடக்கு,கிழக்கு நிரந்தரமாக
இணைய முடியாதவாறான
ஏற்பாடுகளை தந்திரமாக சொருகி இருந்தமை
குறிப்படத்தக்கது.வடக்கு,கிழக்கு இணைப்பை பிரித்ததும்
இவ்வரசல்ல.ஜே.வி.பி மற்றும் ஜாதிக
ஹெல உறுமய
ஆகிய இணைந்து
செய்த வழக்குத்
தாக்கல் மூலமாகும்.இதனை அரசு
பிரித்து,இணைத்து
விளையாடியதாக கூறுவது அறியாமையின் வெளிப்பாடு.
////என்னன்னான ஒண்ட செய்ங்கோ////
என்னன்னான
ஒண்ட செய்ங்கோ
ஒன்றை செங்கோ
என்று விட்டு
விட்டு இருக்க
இது ஒன்றும்
சிறு பிள்ளைகள்
விளையாடும் சுரட்டை விளையாட்டல்ல.இந்த மனோ
நிலை மிகவும்
ஆபத்தானது.
/////நாங்கள் முஸ்லிம் சமூகம் பல
விட்டு கொடுப்புக்களை
செய்து.ஏதாவது
ஒரு உடன்பாட்டுக்கு
வர முடியும்
என்பதில் தெளிவாக
இருக்கின்றோம்.//
விட்டுக்
கொடுப்புக்கள் செய்த இது ஒன்றும் விளையாட்டல்ல.எமது உரிமை
சம்பந்தப்பட்ட விடயம்.அதில் எந்தவிதமான விட்டுக்
கொடுப்புக்களையும் மேற்கொள்ள முடியாது.சிறு தவறும்
பாரிய விளைவுகளை
ஏற்படுத்தும்.
//////தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும்
கௌரவ இரா
சம்பந்தன் ஐய
மீதும் நம்பிக்கை
வைத்துள்ளோம்.////
நீங்கள்
நம்பிக்கை வைக்குமளவு
அவர் செயற்பட்ட
ஒரு விடயத்தை
கூற முடியுமா?
தற்போது அவர்களுக்கு
முஸ்லிம்களின் தேவை உள்ளதால் சில விடயங்களில்
நடித்து கொண்டிருக்கின்றார்கள்.வடக்கு முஸ்லிம்களை
மீள் குடியேற்றுவதில்
தமிழ் தேசிய
கூட்டமைப்பினர் பல்வேறு சவால்களை ஏற்படுத்தி இருந்தனர்.வடக்கு முஸ்லிம்களை
விடுதலை புலிகள்
பலவந்தமாக வெளியேற்றியதை
கூட ஏற்கும்
மன நிலையில்
அவர்கள் இல்லை.கல்முனை மாநகர
சபையில் கொண்டு
வரப்பட்ட கல்முனை
கரையோர மாவட்டத்தை
கூட ஏற்கும்
மன நிலையில்
அவர்களில்லை.இப்படி இருக்கையில் எவ்வாறு நம்ப
முடியும்?
முதலமைச்சரின்
கூற்றை அவதானிக்கின்ற
போது இவ்வரசு
எது செய்தாவது
வடக்கு,கிழக்கை
இவ்வருடத்திற்குள் இணைத்து அவர்களின்
கைகளில் ஒப்படைக்க
வேண்டும் என்ற
வகையில் அமைந்துள்ளது.இதன் பின்னால்
என்ன நிகழ்ச்சி
நிரல் உள்ளதோ
தெரியவில்லை.முஸ்லிம்கள் அவதானமாக இருக்காவிட்டால் எம்
மீது மீண்டுமொரு
அடிமை சாசனம்
எழுதப்படுவதை தவிர்க்க முடியாது.இதனை இணைக்கத்
தான் என்னவோ
அமைச்சர் ஹக்கீமுடன்
அரசியலமைப்பை ஆதரிக்க அனைவரையும் கோரியுள்ளார்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல்
ஹக்
சம்மாந்துறை.
0 comments:
Post a Comment