அறிவியல் சாதனைகளை பாராட்டி ஸ்காட்லாந்து பல்கலைக்கழகம்.

அப்துல் கலாமுக்கு டாக்டர் பட்டம்


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை பாராட்டி, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 20வது இடத்தில் உள்ள ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.இவரது சாதனைகளை கெளரவிக்கும் வகையில், ஸ்காட்லாந்தின் முன்னணி பல்கலைக்கழகமான எடின்பர்க் பல்கலைக்கழகம், அப்துல் கலாமுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக துணைத் தலைவர் திமோதி ஓஷியா, கலாமுக்கு கெளரவ பட்டத்தை வழங்கி கெளரவித்தார். தற்போது 82 வயதாகும் அப்துல் கலாம், எதிர்கால இந்தியா ஒளிர, இளைஞர்களே கனவு காணுங்கள் என இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டியதுடன், ஏழை மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறார். கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை இந்திய ஜனாதிபதி பதவி வகித்துள்ளார். கெளரவ பட்டத்தை பெற்றுக் கொண்ட அப்துல் கலாம், எடின்பர்க் பல்கலை.யின் இந்தியா இன்ஸ்டிடியூட்டை திறந்து வைத்தார்.

மக்கள்  விருப்பம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top