தீவிரவாத வழக்கு
லண்டன் இமாம் குற்றவாளி என தீர்ப்பு
இங்கிலாந்து
தலைநகர் லண்டன்
இமாம், அபு
ஹம்சா அல்
மசுரி
(வயது 56). இவர் மீது,
ஏமனில் 1998ம் ஆண்டு நடந்த மேற்கத்திய
சுற்றுலாப்பயணிகள் கடத்தல் சம்பவம்,
அதில் 4 பேர்
படுகொலை செய்யப்பட்ட
சம்பவம், ஆரேகானில்
தீவிரவாத பயிற்சி
முகாம் நிறுவ
ஏற்பாடு செய்தது,
கூட்டாளி ஒருவரை
ஆப்கானிஸ்தான் அனுப்பி அல்கொய்தா, தலீபான் தீவிரவாத
அமைப்புகளுக்கு உதவச்செய்தது உள்ளிட்ட 11 தீவிரவாத குற்றச்சாட்டுகள்
எழுந்தன.
இது
தொடர்பாக மேன்ஹட்டன்
பெடரல் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இநத வழக்கின்
விசாரணையில் அபு ஹம்சா அல் மசுரி
மீதான குற்றச்சாட்டுகள்
நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர்
குற்றவாளி என
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தண்டனை
விவரம் செப்டம்பர்
மாதம் அறிவிக்கப்படும்
என தகவல்கள்
கூறுகின்றன. இருப்பினும் இவருக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை
வழங்க வாய்ப்பு
இருப்பதாக தகவல்கள்
கூறுகின்றன.
0 comments:
Post a Comment