நெகிழ்ச்சியால் பேச முடியாமல் தவித்தார் மோடி;

கண் கலங்கினார் அத்வானி:

பிரதமர் தேர்வில் உருகவைத்த காட்சிகள்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாரதீய ஜனதா கட்சி புதிய எம்.பி.க்கள் கூட்டம், பாராளுமன்ற மைய மண்டபத்தில்  நடந்தது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நரேந்திரமோடி, வாழ்வில் முதல் முறையாக பாராளுமன்றத்துக்குச் சென்றார்.
பாராளுமன்ற பிரதான நுழைவாயிலில் அவர் வந்தபோது கட்சித்தலைவர்கள் அவருக்கு மலர்க்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து மோடி கைகளை கூப்பி வணங்கியவாறு, பூமியைத்தொட்டு வணங்கினார்.
பாராளுமன்ற கட்டிடத்துக்குள் நுழையும்போது, அவர் படிக்கட்டில் மண்டியிட்டு வணங்கினார். அதைக்கண்ட அனைவரும், மோடியின் தேசப்பற்றை, ஜனநாயகத்தின் திருக்கோவிலான பாராளுமன்றத்தின் மீது அவர் கொண்ட மதிப்பை உணர்ந்து உருகினர்.
பாராளுமன்ற வளாகத்தில் மோடியை அத்வானி வரவேற்று தழுவியபோது, நெகிழ்ந்தார். கண்கள் கசிந்தன.நரேந்திர மோடி அவரது கால்களைத்தொட்டு வணங்கினார்.
நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்து அத்வானி பேசுகையில் உணர்ச்சிப்பிழம்பாகக் காணப்பட்டார்.
எப்போதுமே மோடி ஒரு வலுவான தலைவராகத்தான் தன்னை காட்டிக்கொண்டிருக்கிறார். வீராவேசமாகத்தான் பேசுவார். ஆனால் மலைபோன்ற மோடி, ஒரு பனிமலையாய் மாறிப்போனார்.

நரேந்திர மோடியை பாரதீய ஜனதா பாராளுமன்றக் கட்சித்தலைவராக முன்மொழிந்து அத்வானி பேசியபோது கூறிய வார்த்தைகளை மோடி நினைவுபடுத்திப்பேசினார்.
அப்போது அவரது குரல் கம்மியது. நாக்கு தழுதழுத்தது. தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை என பாரத செய்திகள் தெரிவிக்கின்றன.



மக்கள் விருப்பம்

மக்கள் விருப்பம்

மக்கள் விருப்பம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top