இணைய தளங்கள் முடக்கப்பட்டமைக்கு எதிராக
மனித உரிமை
ஆணைக்குழுவில்
முறைப்பாடு
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
இணைய
தளங்கள் முடக்கப்பட்டமைக்கு
எதிராக இலங்கை
மனித உரிமை
ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில இணைய
தளங்கள் சட்டவிரோதமான
முறையில் முடக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்சார் இணைய
ஊடகவியலாளர்கள் பேரவையினால் இந்த முறைப்பாடு இன்று
செய்யப்பட்டுள்ளது.
அண்மைக்
காலத்தில் குறைந்தபட்சம்
எட்டு இணைய
தளங்கள் இலங்கையில்
முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிடும்
இணைய தளங்களே
இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
இலங்கை
மனித உரிமைகள்
பேரவைக்கு இது
தொடர்பான முறைப்பாட்டை
வழங்கச் சென்ற
போது, தாங்களும்
பங்கேற்று அதற்கு
ஆதரவாகச் செயற்பட்டவர்கள்
மற்றும் செய்திகளையும்
படங்களை வெளியிட்ட
தமிழ் ஊடக
நிர்வாகிகள் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள், இணையத்தளங்கள்
அனைத்துக்கும் தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் பேரவையின்
சார்பில் எனது
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்,
சிங்கள ஊடகங்களை
மட்டும் குறிப்பிடடு
இந்த முறைப்பாட்டை
வழங்கவில்லை. “ஜப்னா முஸ்லிம்“ என்ற முஸ்லிம்
ஊடகமும் இலங்கையில்
பார்க்க முடியாது
முடக்கப்பட்டுள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment