எம்.எச்.17: சடலங்கள், கறுப்பு பெட்டியை ஒப்படைத்தனர் கிளர்ச்சியாளர்கள்
சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக
நெதர்லாந்து கொண்டுவரப்பட்டது.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, சுட்டு வீழ்த்தப்பட்டதில் இறந்தவர்களின் சடலத்தை கிளர்ச்சியாளர்கள் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17ஆம் திகதி உக்ரைனில் ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இருப்பினும் இந்த விமானம் திட்டமிட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது வேறு ஒரு விமானத்தை குறிவைத்ததில் தவறுதலாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதா? என்பதில் உறுதியான தகவல்கள் இல்லை.
சம்பவ இடத்தில் உக்ரைன் அரசின் நெருக்கடி கால சேவை பணியாளர்கள் 380 பேர், 34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தில் 298 பேர் பலியான நிலையில், அவர்கள் 196 உடல்களை கண்டெடுத்துள்ளதாக அறிவித்தனர். பல உடல்களை ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடத்துக்கு எடுத்துச்சென்று விட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாயின. மேலும், கிளர்ச்சியாளர்கள் சம்பவ பகுதிக்கு தங்களை அனுமதிக்க மறுக்கின்றன என்று .எஸ்.சி.. என்னும் பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பு குற்றம் சாட்டியது. இதனையடுத்து ரஸ்யா உலக நாடுகளின் நெருக்கடிக்கு உள்ளானது.

தற்போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானோர்கள் உடல்களை கிளர்ச்சியாளர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் விமானத்தின் கறுப்பு பெட்டியையும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்; விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து கீவ் நகருக்கு சுமார் 200 சடலங்கள் அனுப்பபட்டது. அவை உக்ரைன் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கியிருந்து சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக நெதர்லாந்து கொண்டுவரப்பட்டது.
நெதர்லாந்து அதிகாரிகளிடம் சடலங்களை ஒப்படைப்பது தொடர்பாக மலேசிய அதிகாரிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்தே சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ரயில் நகர்ந்தது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் அதிகம் பேர் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள். என்று கூறினார். இதற்கிடையே கிளர்ச்சியாளர்கள் விமானத்தின் கறுப்பு பெட்டியை மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்களின் தலைவர் அலெக்சாண்டர் போரோடாய் கறுப்பு பெட்டியை ஒப்படைத்துள்ளார். கறுப்பு பெட்டிகள் இரண்டும் நல்ல நிலையில் உள்ளது என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top