சம்மாந்துறை பிரதேச சபையின் ஞாபகப்படுத்தலுக்காக.
(மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்)
சம்மாந்துறை
உடங்கா - 01 கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட
பிரதேசத்தில் பல வீதிகள் இன்னும் திருத்தம்
செய்யப்படாதிருக்கின்றது. அந்த வீதிகளில்
வாழும் மக்களும்
அது சம்பந்தமாக
விசனம் தெரிவித்துக்
கொண்டிருக்கின்றார்கள்.
இந்த
வீதிகளில் நிலமைகளை
வெளிச்சம் போட்டுக்
காட்டுங்கள் அதன் மூலமாவது எங்கள் வீதிகளுக்கு
ஒரு விடிவுகாலம்
பிறக்கட்டும் என்று என்னோடு இந்தப் பிரதேசவாசிகள்
தெரிவித்தார்கள்.
அதற்கு
இணங்க இன்று
நான் உடங்கா
- 01 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள குறசினார்
லேனை சென்று
பார்வையிட்டேன். அந்த நேரம் என் கெமறாவுக்குல்
அகப்பட்டவைகளே இந்தப் புகைப்படங்கள்.
இந்த
கிராம சேகவர்
பிரிவுக்கு உட்பட்ட பல வீதிகள் இன்னும்
திருத்தப்படாதுதான் இருந்து கொண்டிருக்கின்றது.
சம்மாந்துறை
பிரதேச சபையினதும்,
சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும், அரசியல்வாதிகளினதும்
பார்வை தேர்தல்
காலங்களில் மாத்திரதே இப்பிரதேச மக்கள் மீது
படுவதாக இவ்வீதியில்
குடியிருக்கும் மக்கள் என்னோடு தெரிவித்தார்கள்.
நான்
ஏற்கனவே இக்கிராம
சேவகர் பிரிவுக்கு
உட்பட்ட அம்பாறை
12ம் வீதியை
அதாவது மக்கீனின்
மர ஆலைக்கு
அருகாமையில் இருக்கும் வீதியைப் பற்றியும் குறிப்பிட்டு
இருக்கின்றேன். அதனோடு சேர்த்து இந்த குறசினார்
லேனையும் சம்பந்தப்பட்டவர்கள்
ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இவ் இரு
வீதிகளின் திருத்த
வேலைகளுக்கு காத்திரமான நடவடிக்கைகளை மேற் கொள்ள
வேண்டும்.
ஆகவே
சம்மாந்துறை பிரதேச சபையானது இது தொடர்பாக
உயர் மட்டங்களுக்கு
அழுத்தம் கொடுத்து
அதற்கு போதுமான
நிதிகளைப் பெற்றுக்
கொண்டு இவ்
வீதிகளை திருத்தம்
செய்து தருமாறு
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
0 comments:
Post a Comment