மலேசிய விமானம்
சுட்டு வீழ்த்தப்பட்டதில்
மலேசிய பிரதமரின்
பாட்டியும் பலி
மலேசிய
விமானம் சுட்டு
வீழ்த்தப்பட்டதில் மலேசிய பிரதமர்
நஜிப் ராசக்கின்
பாட்டியும் பலியாகினார்.
மலேசிய
ஏர்லைன்ஸ் விமானம்
(எம்.எச்.17),
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து
மலேசிய தலைநகர்
கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் பறந்து கொண்டிருந்த போது, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள்
பிடித்து வைத்துள்ள
ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் நேற்று முன்தினம்
சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதில் விமானத்தில்
வந்த 298 பேரும்
உயிரிழந்து கரிக்கட்டைகள் போன்று உருக்குலைந்து போயினர்.
இதில் மலேசிய
பிரதமர் நஜிப்
ராசக்கின் ஒன்றுவிட்ட
பாட்டியும் பலியாகினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் கிளர்ச்சியாளர்களால்
சுட்டு வீழ்த்தப்பட்ட
விமானத்தில் நஜிப் ராசக்கின் பாட்டி பயணம்
செய்ததை அந்நாட்டு
பாதுகாப்புத்துறை உறுதி செய்துள்ளது.
மலேசிய பிரதமர் நஜிப்
ரசாக்கின் தாய்வழி
தாத்தாவின் 2வது மனைவியான சித்தி அமிர்ரக்
( வயது 83) உறவினர்களின் பராமரிப்பில்
நெதர்லாந்தில் வசித்து வந்துள்ளார். ரமழான் பெருநாளை
தான் பிறந்து வளர்ந்த இந்தோனேஷியாவில்
கொண்டாவேண்டும் என்று விரும்பி அவர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து தனியாக விமானம் ஏறிவந்துள்ளார். கோலாலம்பூர்
நோக்கி விமானம்
வந்தபோது உக்ரைன்
கிளர்ச்சி படையினரால்
சுட்டு வீழ்த்தப்பட்டது.
0 comments:
Post a Comment