செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் 

அமெரிக்க தம்பதி

விஞ்ஞானிகளைத்தவிர மற்றவர்களுக்கு எட்டாக்கனியாக விளங்கி வந்த விண்வெளிப்பயணம், தற்போது பெரும் செல்வந்தர்களுக்கு கைகூடும் நிலையை எட்டியுள்ளது. அதன்படி அடுத்த சில ஆண்டுகளில் ஏராளமானோரை விண்வெளிக்கு அழைத்து செல்லும் வகையில், உலக அளவில் பல தனியார் நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலாவுக்கு திட்டமிட்டு வருகின்றன.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக அமெரிக்காவின் அரிசோனாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று, எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டேபர் மெக்கல்லம் மற்றும் அவரது மனைவி ஜேன் பாய்ன்டர் என்ற தம்பதியர், செவ்வாய் பயணத்துக்காக அந்த தனியார் நிறுவனத்திடம் பதிவு செய்துள்ளனர். இவர்கள் செவ்வாய்கிரகத்தை சுற்றி பறந்துவிட்டு திரும்புவார்கள். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், இந்த திட்டத்துக்கு அமெரிக்க அரசின் ஒப்புதலுக்காகவும், நிதி ஒதுக்கீட்டுக்காகவும் தற்போது இந்த தம்பதியர் காத்திருக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top