கல்முனைத் தொகுதி வாக்காளர்களின்
இரண்டு சாதனைகளுக்கு காரணம் வாக்காளர்களா? அரசியல்வாதிகளா?
வினாவுவது நாங்கள் சிந்தித்து தீர்மானிப்பது நீங்கள்
கடந்த
8 ஆம் திகதி
நடைபெற்று முடிந்த
இலங்கையின் 7 வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்
படி இலங்கையிலுள்ள
தேர்தல் தொகுதிகளுள்
கல்முனைத் தொகுதி
இரண்டு சாதனைகளைப்
படைத்துள்ளது.
இலங்கையின்
6 வது ஜனாதிபதி
மைத்திரபால சிரிசேன அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளில்
தொகுதிரீதியாக கல்முனைத் தொகுதியிலேயே அதி கூடிய
வாக்கு வீதமான
89.81% பதிவாகியுள்ளது.
அதேவேளை, முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்க்ஷ அவர்களுக்கு
இலங்கையிலுள்ள தொகுதிகளுள் அளிக்கப்பட்ட வாக்கு வீதத்தில்,
ஆகக்குறைந்த வாக்கு வீதமான 9.26% மும் கல்முனைத்
தொகுதியிலேயே பதிவாகியுள்ளது.
இச்சாதனையை
கல்முனைத் தொகுதியிலுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து படைத்தார்களா? இல்லை இதற்கு
காரணமாக அரசியல்வாதிகள் செயல்பட்டார்களா? வினாவுவது நாங்கள் சிந்தித்து தீர்மானிப்பது
நீங்கள்.
0 comments:
Post a Comment