வீதிக்கு நடுவே மின்கம்பம்
அகற்றி தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள்!


ஏறாவூர் மாவடி வீதியின் ஊடாகச் செல்லும் வீதியே இது இவ்வாறன முறையில் மின் கம்பம் அமைந்து இருப்பதன் காரணமாக இப் பாதையினுடாக செல்லும் மக்கள் பல அசெளகரியங்களை எதிர் நோக்குகிறார்கள் என அறிவிக்கப்படுகின்றது.
இப் பாதை புனரமைப்பின் போது மின் கம்பம் அகற்றபடாமல் பாதை திருத்தம் மேற்கொண்டமை அதிகாரிகளின் அசமத்தனமான போக்குகளை காட்டுகின்றது என இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏறாவூர் நகரசபை மற்றும் மின்சாரசபை உரிய அதிகாரிகள் இதனை அகற்றி தருமாறு இப்பிரதேச மக்கள் வேதனையுடன் வேண்டுகோள் விடுக்கின்றனர். குறித்த அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பார்களா? 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top