1700 ஏக்கர் நெற்செய்கை அழிவு;
நஷ்டஈடு கோரி விவசாயிகள் கல்முனையில் ஆர்ப்பாட்டம்!
கல்முனையில்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்
தமக்கு நஷ்டஈடு
வழங்கப்பட வேண்டும்
எனக் கோரி
கடந்த திங்கட்கிழமை
கல்முனை பிரதான
பஸ் நிலையத்திற்கு
பின்னாலுள்ள வயல் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில்
ஈடுபட்டனர்.
கல்முனைப்
பகுதியில் சுமார்
1700 ஏக்கர் விவசாயக் காணிகளில் நெற்செய்கை பண்ணப்பட்டிருந்த
நிலையில் அண்மையில்
பெய்த மழையினால்
அவை நீரில்
மூழ்கி முற்றாக
அழிவடைந்துள்ளன என்றும் அதனால் தாம் பெரும்
நஷ்டமடைந்திருப்பதாகவும் இதற்காக தாம்
பெற்ற கடன்களைக்கூட
செலுத்த முடியாமல்
திண்டாடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment