காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்தல்
45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி
அமைச்சரவை அங்கீகாரம்
காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன்
அமெரிக்க டொலர்
நிதியினை இந்திய
இறக்குமதி – ஏற்றுமதி வங்கி வழங்குவதற்கு இணக்கம்
தெரிவித்துள்ளது.
இதற்கான
திட்டம் இலங்கை
துறைமுக அதிகார
சபையினால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது
தொடர்பான நிபந்தனைகள்
தொடர்பில் இந்திய
இறக்குமதி – ஏற்றுமதி வங்கியுடன் கலந்துரையாடி ஒப்புதல்களை
கைச்சாத்திடுவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய
கொள்கைகள் மற்றும்
பொருளாதார விவகாரங்கள்
அமைச்சர் என்ற ரீதியில்
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க இதற்கான ஆவணத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.பிரதமரால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment