10 வருடங்களில் 9 குழந்தைகள் பெற்று

87 மாதங்கள் கர்ப்பிணியாக இருந்த சூப்பர் அம்மா

ஒரு சராசரி குடும்பம் என்றால் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தையுடன் காணப்படும். எமது ஊர் வழக்கப்படி சொல்வதென்றால், ஆசைக்கு ஒ ரு  குழந்தை ஆஸ்திக்கு ஒரு குழந்தை. அத்துடன் போதும் என்று பெரும்பாலானோர் குடும்பக்கட்டுபாடு செய்து கொள்வார்கள்.
இங்கிலாந்தில் ஒரு பெண்மூன்று குழந்தை, நான்கு குழந்தையல்ல, மொத்தம் ஒன்பது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அதுவும் 10 வருடத்தில், அவர் 10 வருடங்களில் மொத்தம் 87 மாதங்கள் கர்பிணியாக இருந்ததுள்ளார். அவர் பெயர் தோனியா பாரணட் வயது 40, இவரது கணவர் பெயர் ஜேசன் வயது 41. 
தோனியாவின் 21 வயது பிறந்த நாள் விழாவின் போது (1994 ஆம் ஆண்டு) அவரது கணவர் ஜோசன் தனது காதலை சொல்லியிருக்கிறார். அதன்பின் 2000 ஆம் ஆண்டு இத் காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். முதல் தடவை கர்பமாண தோனியாவிற்கு கரு கலைந்துவிட்டது. இதனால் தோனியாவிற்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகமான ஆசை உருவானது.
இதனையடுத்து அவருக்கு குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தை பிறந்தது. இப்படியே 12 குழந்தை பிறந்தது. முதல் குழந்தைக்கு தற்போது 12 வயது ஆகிறது. கடைசி குழந்தைக்கு 2 வயது ஆகிறது. அதன்பின் அவர் குடும்பக்கட்டுபாடு செய்து கொண்டார். 87 மாதங்கள் கர்பிணியாக இருந்து சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தோனியா, தன்னுடைய  9 குழந்தைகளையும் பார்க்கும்போது எல்லாம் மகிழ்ச்சி அடையும் மற்றவர்கள் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று எண்ணுவதாகவும், ஆனால் நான் சுறுசுறுப்பாக வேலை செய்து எனது குழந்தைகளை சிறப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
எனக்கு 9 குழந்தைகள் உள்ளதால் யாராவது என் கணவரை கிண்டல் செய்தால் அவருக்கு கோபம் வந்துவிடும். ஆனால் அவர் எங்களையும் கவனித்துக் கொண்டு வேலையையும் சிறப்பாக செய்து வருகிறார். மிகவும் கடிணமாக உழைக்கும் அவர் எங்களையும் மிகவும் அதிகமாக நேசிக்கிறார என்று தோனியா மகிழ்ச்சியுட்ன் தெரிவித்துள்ளார். ஜேசன் சொந்தமாக ஒரு தச்சு தொழில் செய்து வருகிறார். யாருடைய உதவியும் இல்லாமல் 7 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் மற்றும் தொழிலை ஜேசன் கவனித்து வருகிறார்.

ஜேசன் குடும்பத்தினர் உணவு செலவுக்கு மட்டும் வாரம் 300 பவுண்ட்களுக்கு மேலும் செலவு செய்வதாகவும், குழந்தைகளை நல்லபடியாக கவனித்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top