சுனந்தா புஷ்கர் மரணம் விவகாரம்;
டாக்டரின்
குற்றச்சாட்டை மறுத்தது டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை
சுனந்தா
மரணம் தொடர்பான
டாக்டரின் குற்றச்சாட்டை
இந்திய எய்ம்ஸ் மருத்துவமனை மறுத்துள்ளது.
அவரது குற்றச்சாட்டை
நிராகரித்துள்ளது.
முன்னாள்
இந்திய மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஜனவரி மாதம்
17ஆம் திகதி டில்லி லீலா ஓட்டலில் மர்மமான
முறையில் இறந்து
கிடந்தார். அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டதால் இறந்து
இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனாலும் சுனந்தாவின்
மரணத்தில் மர்மமே
நீடித்தது. சுனந்தா இயற்கை மரணம் அடைந்தார்
என்று டில்லி
எய்ம்ஸ் மருத்துமனை
பிரேத பரிசோதனை
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்
இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் டாக்டர் சுதிர்
குப்தா பரபரப்பு
குற்றச்சாட்டை கூறினார்.
சுனந்தாவின்
உடலை பிரேத
பரிசோதனை செய்த
டாக்டர்கள் குழுவின் தலைவராக இருந்த சுதிர்
குப்தா, 'சுனந்தா
இயற்கை மரணம்'
அடைந்தார் என்று
பிரேத பரிசோதனை
அறிக்கையில் குறிப்பிடுமாறு உயர் அதிகாரிகள் தன்னை
கட்டாயப்படுத்தினர். நிர்ப்பந்தப்படுத்தி அறிக்கை பெற்றனர் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து அறிக்கை அளிக்குமாறு
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு
மத்திய அமைச்சர்
ஹர்ஸ் வரதன் உத்தரவிட்டார் ஆனால்
இவ்வழக்கு விவகாரத்தில்
எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று டில்லி கமிஷ்னர் பி.எஸ். பாஸ்சி
கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் உண்மையை அறிய நாங்கள்
டாக்டர் சுதிர்
குப்தாவிடம் விசாரிப்போம். அவர்களுடைய கருத்துக்கள் பெறப்படும்
என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்
இப்பிரச்சனைக்கு ஏய்ம்ஸ் மருத்துவமனை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
டாக்டர் சுதிர்
குப்தாவின் குற்றச்சாட்டை மறுத்த ஏய்ம்ஸ் மருத்துவமனை
பிரேத பரிசோதனையில்
மாற்றம் செய்ய
அவருக்கு எந்த
ஒரு நிர்பந்தமும்
இல்லை என்றும்
கூறியுள்ளது.
0 comments:
Post a Comment