பேஸ்புக் லைக்கில்
கொலம்பியா பாப் பாடகி ஷகிரா சாதனை
100 மில்லியன் பேர் லைக் கொடுத்துள்ளனர்

கிராமி விருது வென்ற கொலம்பியா பாப் பாடகியான ஷகிராவின் பேஸ்புக் பக்கத்திற்கு 100 மில்லியன் பேர் லைக் கொடுத்துள்ளனர்.
உலக அளவில் ஒருவரின் பதிவிற்கு, இவ்வளவு லைக்குகள் கிடைக்கப் பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்று பீபிள்ஸ் மேகசின் தெரிவித்துள்ளது. இந்த உலக சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷகிரா பேஸ்புக் தனது ரசிகர்களுக்கும தனக்கும் இடையே பாலமாக உள்ளதாக நன்றி தெரிவித்தார்.
இது குறித்து பத்திரிக்கைகளிடம் பேசிய ஷகிரா, "இந்த மைல் கல்லை எட்டியதை நான் பெரிய கெளரவமாக நினைக்கிறேன். சமூக ஊடகங்கள், குறிப்பாக, ஃபேஸ்புக், என்னைப் போன்ற பல கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் நடுவே இருந்த இடைவெளியைக் நிரப்பியுள்ளது" என்றார்.
இதோடு, இதுவரை ஃபேஸ்புக்கில் தனது மறக்க முடியாத தருணங்களைப் பற்றிய வீடியோ ஒன்றையும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஷகிரா பதிவேற்றியுள்ளார்.
இந்த சாதனையையொட்டி, ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஸக்கர்பெர்க், ஷகிராவின் பக்கத்தில் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவைச் சேர்ந்த பாடகியான ஷகிரா, பல பாப் பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். முக்கியமாக, சென்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக இவர் பாடிய 'வாகா வாகா' பாடல் உலக அளவில் மிகப் பிரபலமானது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top