இஸ்ரேல் இராணுவத்தின்
கொடூரத் தாக்குதல்களால்
காஸாவில் உயிரிழப்பு
300-ஐ தாண்டியது
ஒரே குடும்பத்தினர்
8 பேர் பலி
காஸா
மீது இஸ்ரேல் இராணுவம் வெள்ளிக்கிழமை
இரவு தொடர்ந்து
நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த 8 பேர்
உட்பட 26 பாலஸ்தீனர்கள்
உயிரிழந்தனர். இதனால், காஸாவில் 12ஆவது நாளாக
இஸ்ரேலின் முப்படைகளும்
நடத்தி வரும்
கடும் தாக்குதலில்
உயிரிழந்த பாலஸ்தீனர்களின்
எண்ணிக்கை 300-ஐ தாண்டியதாக அறிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல்
இராணுவத்துக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே
கடந்த 8ஆம்
திகதி முதல்
கடும் போர்
நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலின்
தலைநகர் டெல்அவிவ்
உள்ளிட்ட முக்கிய
நகரை குறிவைத்து
காஸா பகுதியில்
இருந்து ஏவுகணைகள்
மூலம் ஹமாஸ்
போராளிகள் தாக்குதல்
நடத்தி வருகின்றனர்.
அதற்கு
பதிலடியாக இஸ்ரேலின்
இராணுவம் விமானப்படை,
கடற்படை மற்றும்
பீரங்கிப்படை என முப்படைகளும் ஹமாஸ் போராளிகளை
குறிவைத்து காஸா மீது இரவு பகலாக
குண்டுகளை வீசி
கடும் தாக்குதலில்
ஈடுபட்டு வருகிறது
காஸாவில்
இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும்,
2,200 பேர் காயமடைந்துள்ளதாகவும், 40 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment