காஸாவில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு
இஸ்ரேல் எச்சரிக்கை

13 நாட்களாக நடத்தப்பட்டுவரும் இஸ்ரேல் தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 395 தாண்டியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல்

கிழக்கு காஸாவிலுள்ள ஒரு மாவட்டத்தில் மட்டும் 40 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிப்பு.

இதேவேளை, காஸாவில் உள்ள செய்தியாளர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையேயான பகைமை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விசுவரூபம் எடுத்துள்ளது. ஹமாஸ் போராளிகள் ஆட்சி செய்து வருகிற காஸாமுனை மீது இஸ்ரேல் கடந்த 8 ஆம் திகதி தொடக்கம்  போர் விமானங்கள் மூலம் குண்டுமழை பொழிந்து வருகின்றது.
பதிலுக்கு இஸ்ரேல் நகரங்கள்மீது ஹமாஸ் போராளிகள் தொடர்ந்து ராக்கெட் வீச்சு நடத்தி வருகின்றனர்.13 நாட்களாக நடத்தப்பட்டுவரும் இஸ்ரேல் தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 395யை தாண்டியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன.  
கிழக்கு காஸாவிலுள்ள ஒரு மாவட்டத்தில் மட்டும் 40 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் தாக்குதலில் சிறுவர்களும் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, காஸாமுனை மீதான தரைவழி தாக்குதலை குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவுபடுத்துவதற்கு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறதுகாஸாவில் ஹமாஸ் தீவிரவாத இயக்க தலைவர் வீட்டின் மீது இஸ்ரேல் இராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் பலியாகினர். ஹமாஸ் தலைவர் காலீல் அல் ஹய்யாக் மகன், ஒசாமா அல் ஹய்யக், அவரது மருமகள், அவர்களது குழந்தைகள் இந்த தாக்குதலில் பலியாகினர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் காஸாவில் இருந்து செய்திகள் சேகரிக்கும் வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. செய்தியாளர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று இஸ்ரேல் பத்திரிக்கை அலுவலகம் அறிவித்துள்ளது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் செய்தியாளர்களும் செய்திகள் சேகரித்து வருகின்றனர். அவர்களை ஹமாஸ் இயக்கத்தினர் மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையே செய்தியாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top