ஊவா மாகாணத்தின்
மாகாண சபைத் தேர்தல்கள் 2014
வேட்புமனு கையேற்றல் 2014.07.30 ஆம் திகதி
தொடக்கம்
2014.08.06 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை
ஊவா
மாகாண சபைக்கான வேட்புமனு கையேற்றல் 2014.07.30 ஆம் திகதி தொடக்கம் 2014.08.06 ஆம்
திகதி நண்பகல் 12.00 மணி வரை உரிய மாவட்டங்களின்
மாவட்ட செயலக அலுவலகங்களில் நிறுவப்படுகின்ற வேட்புமனு கையேற்பு நிலையங்களில் மேற்கொள்ளப்படும்
என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
அறிவித்துள்ளார்.
இது
குறித்து தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
கட்டுப்பணம்
கையேற்றல் வேட்புமனு அறிவித்தல் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து வேட்புமனு காலக்கெடு
முடிவடைகின்ற தினத்திற்கு முந்திய தினமான 2014.08.05 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை
கையேற்கப்படும்.
பதுளை
மற்றும் மொணராகலை மாவட்டங்களுக்காக கட்சியிலிருந்து அல்லது ஒரு குழுவிலிருந்து பெயர்
குறிப்பிடப்பட வேண்டிய வேட்பாளர் எண்ணிக்கை முறையே 21 மற்றும் 17 என்பதுடன் அந்தந்த
மாவட்டங்களுக்காக வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை முறையே 18 மற்றும் 14 என்பதோடு முழு ஊவா மாகாணத்திலும் அதி கூடிய வாக்கு
எண்ணிக்கை ஒன்றை பெறுகின்ற கட்சியின் செயலாளருக்கு அல்லது சுயேட்சைக் குழுவின் தலைவருக்கு
தற்றுணிவின்படி வேட்பாளர்களிடையே இருவரை மிகை ஆசனத்திற்காக பெயர் குறிப்பிட முடியும்
எனவும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்
தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
பதுளை - 18 உறுப்பினர்கள்
மொணராகலை
– 14 உறுப்பினர்கள்
வேட்பாளர்கள்
எண்ணிகை
பதுளை
மாவட்டம் – 21 வேட்பாளர்கள்.
மொணராகலை – 17 வேட்பாளர்கள்.
0 comments:
Post a Comment