முஸ்லிம்
அரச ஊழியர்களுக்கு 14 நாட்களுக்கு முன்னதாக பெருநாள் முற்பணம் வழங்குவதற்கு நடவடிக்கை
எடுக்குமாறு சுற்றறிக்கை
புனித
ரமழான் பெருநாளின் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரச சேவை கூட்டுத்தாபனங்கள்,
சட்டவாக்கச் சபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு
பெருநாள் முற்பணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு
அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.பீ.அபேகோன் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின்
தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகளின்
தலைவர்கள் ஆகியோர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை,
ரமழான் காலத்தில் முஸ்லிம் அரச அலுவலர்களுக்கு /பணியாளர்களுக்கு தொழுகையிலும் மத வழிபாடுகளிலும்
கலந்து கொள்ளக்கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தொழுகைகளும்,
மதவழிபாடுகளும் நாளாந்தம்
பின்வரும்
நேர அட்டவணைப்படி நிகழும்
மு.ப 03.30 முதல் மு.ப 06.00 மணி வரை
பி.ப 03.15 முதல் பி.ப 04.15 மணி வரை
பி.ப 06.00 முதல் பி.ப
07.00 மணி வரை
பி.ப 07.30 முதல் பி.ப
10.30 மணி வரை
இக்காலங்களின்போது
முஸ்லிம் அலுவலர்கள் / பணியாளர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக வேலை நேரங்களை
ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் விசேட
லீவு அங்கீகரிக்கப்படலாம். என்றும் அந்த சுற்றறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment