எம்.எச்-17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்:
சர்வதேச விசாரணைக்
குழு அமைக்கப்பட்டது
மலேசியா,
நெதர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்
இணைந்து சர்வதேச
விசாரணைக் குழுவை
அமைத்துள்ளன.
இந்நிலையில்,
சம்பவ பகுதியை
கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருப்பதால் அங்கு விசாரணைக் குழுவினர் செல்வதில்
நடைமுறை சிக்கல்
இருப்பதாகவும், சர்வதேச விசாரணைக் குழுவினர் பாதுகாப்பை
உறுதி செய்ய
முடியாது என்றும்
உக்ரைன் தெரிவித்துள்ளது.
சம்பவ
பகுதியை நெருங்குவதில்
உள்ள சிக்கல்
வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள மலேசிய அரசு சர்வதேச
விசாரணைக் குழுவினர்
எவ்வித நெருக்கடியும்
இல்லாமல் விசாரணை
மேற்கொள்ள உக்ரைன்
அரசு உதவ
வேண்டும் என
வேண்டுகோள் விடுத்துள்ளது.
மலேசிய
போக்குவரத்து அமைச்சர் லியோவ் டியோங் லாய்,
உக்ரைன் தலைநகர்
கியவில் செய்தியாளர்கள்
சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
மலேசியாவில்
இருந்து நிபுணர்கள்,
மீட்புக் குழுவினர்
அடங்கிய 133 பேர் உக்ரைனில் முகாமிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment