பாலஸ்தீனியர்கள்
பலி 500-ஐ கடந்தது
18 இஸ்ரேல் இராணுவ
வீரர்களின் மரணத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் வேதனை தெரிவிப்பு.
தாக்குதலை
உடனே நிறுத்தும்படி ஐ. நா சபை வலியுறுத்தல்
காஸா
மீது இஸ்ரேல்
நடத்தி வரும்
வான்வழி மற்றும்
தரைப்படை தாக்குதலுக்கு
எதிராக ஹமாஸ்
போராளிகள் தீவிரமாக
போராடி வருகின்றனர். கடுமையான சண்டையில்
18 இஸ்ரேல்இராணுவ வீரர்களும், 501 பாலஸ்தீனர்களும்
உயிரிழந்தனர். 3,100-க்கும் மேற்பட்டோர்
காயமடைந்துள்ளனர்.
13 நாட்களாக
நீடித்து வரும்
இந்த தாக்குதலில்
குழந்தைகள், சிறுவர், சிறுமியர் முதியவர்கள், பெண்கள்
என மொத்தம்
501 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். 3100 அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இவர்களில்
நேற்றைய தாக்குதலில்
மட்டும் நூற்றுக்கும்
அதிகமான பாலஸ்தீனியர்கள்
பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமை
மோசமடைந்ததையடுத்து, ஐக்கிய நாடுகள்
சபையின் பொதுச்
செயலாளர் பான்
கி மூன்
மத்திய கிழக்கு
நாடுகளுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டார். கத்தார்
அமீர் ஷேக்
தமீம் பின்
ஹமாத் அல்-தானியை சந்தித்த
பான் கி
மூன்,
இந்த
கொடூரமான நடவடிக்கையை
நான் கண்டிக்கிறேன்.
காஸா பகுதி
மீது நடத்தி
வரும் தாக்குதல்களை
இஸ்ரேல் படைகளும்,
இஸ்ரேல் மீதான
ராக்கெட் தாக்குதல்களை
ஹமாஸ் படையினரும்
உடனடியாக நிறுத்திக்
கொள்ள வேண்டும்’
என்று செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.
இதற்கிடையில்,
ஐ.நா.
பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் அதன்
தலைமை செயலகத்தில்
இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்
பங்கேற்ற 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், 2012-ம் ஆண்டு செய்துக் கொண்ட
போர் நிறுத்த
உடன்படிக்கையின்படி, இஸ்ரேல் இராணுவம்
மற்றும் ஹமாஸ்
போராளிகள் உடனடியாக
தாக்குதல்களை கைவிட்டு அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட
வேண்டும் என்று
வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை,கடுமையான
சண்டையில் 18 இஸ்ரேல்இராணுவ வீரர்களும், 501 பாலஸ்தீனர்களும் உயிரிழந்தனர். 3,100-க்கும்
மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸ்
போராளிகள் ஆதிக்கம்
நிறைந்த காஸா
மீது இஸ்ரேலின்
தாக்குதல் தொடரும்
என்று அந்நாட்டின்
பிரதமர் பெஞ்சமின்
நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இரு
தரப்பினர்களுக்கும் கடந்த இரு
வாரங்களாக நடைபெற்று
வரும் கடுமையான
சண்டையில் 18 இஸ்ரேல் இராணுவ வீரர்களும்,
501 பாலஸ்தீனர்களும் உயிரிழந்தனர். 3,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்த நிலையில், ஜெருசலேமில் செய்தியாளர்களிடம்
இஸ்ரேல் பிரதமர்
பெஞ்சமின் நெதன்யாகு
கூறிகையில், ""ஹமாஸ் தீவிரவாதிகள்
ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ
வீரர்கள் உயிரிழந்தது
வேதனையையும், கஷ்டத்தையும் அளித்துள்ளது.
எனினும், இஸ்ரேல்
இராணுவம் ஆபரேஷன்
புரோடெக்டிவ் எட்ஜ் நடவடிக்கையை முழு வீச்சுடன்
தொடர்ந்து மேற்கொள்ளும்''
என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment