63 வயது பாட்டி 9 வயது சிறுவனை 2-வது முறையாக
திருமணம் செய்து
கொண்டார்
தென்
ஆப்பிரிக்காவை சேர்ந்த 63 வயது பாட்டி 9 வயது
நிரம்பிய சிறுவனை
இரண்டாவது முறையாக
திருமணம் செய்து
கொண்டார். வடகிழக்கு
தென் ஆப்பிரிக்கா.ஷிம்குங்வே பகுதியை சேர்ந்தவர்
ஹெலன் ஷாபாங்கு
( வயது 63) இவரது கணவர் ஷாபாங்கு (வயது
66) இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
ஹெலன்
ஷாபாங்குவின் இறந்த முன்னோர்கள் கனவில் வந்து கூறியதால்
பாரம்பரியத்தை முன்னிட்டு இவர் 9 வயது நிரம்பிய
ஷானாலே மசிலிலா
என்ற பள்ளி
மாணவனை இரண்டாவது
முறையாக திருமணம்
செய்து கொண்டார்.
இவர்களது திருமணம்
ஏற்கனவே கடந்த
ஆண்டு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நீலம் மற்றும்
வெள்ளி நிற
உடையில் மணமக்கள்
கலந்து கொண்டனர்.
திருமணவிழாவில் மணமகளின்
உண்மையான கணவர்
ஷாபாங்கும் கலந்து கொண்டார்.
திருமண
விழா புமலங்கா
பகுதியில் நடைபெற்றது
இதில் 100க்கும்
மேற்பட்ட விருந்தினர்கள்
கலந்து கொண்டனர்.விழாவில் விருந்தினர்கள்
புத்தாடை அணிந்து ஆடி பாடி மகிழ்ச்சி
ஆரவாரம் செய்தனர்.
மணமகள்-மணமகன்
மீது அரிசி
தூவி ஆசீர்வாதம்
செய்தனர்.விழாவில்
கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர்
மணமக்களை வாழ்த்தினார்.
மணமகள்
மாப்பிள்ளை சிறுவனுக்கு முத்தம்
கொடுத்தார். அடுத்து நீண்டநாள் கணவருக்கும்
முத்தம் கொடுத்தார்.
ஷானாலே குடும்பம் இந்த விழாவுக்காக 1, 500 அமெரிக்க டாலர்களை செலவு செய்து உள்ளது.
இத்திருமணம் குறித்து ஷாபாங்கு கூறுகையில் இறந்த முன்னோர்கள் கேட்டு கொண்டதற்காக இந்த திருமண விழா நடத்தப்பட்டது.என்று கூறினார். ஹெலன் ஷாபாங்கு கூறுகையில் நானும் எனது குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த சிறுவன் திருமணம் ஒரு பிரச்சினை அல்ல. மற்றவர்கள் கூறுவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. என்னை இந்த சிறுவன் மணமகளாக தேர்வு செய்தத எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.எங்கள் முன்னோர்களின் சந்தோதத்திற்காக எனது குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் இந்த திருமணம் நடந்து உள்ளது. என கூறினார்
0 comments:
Post a Comment