பாக்தாத் தொடர் குண்டு வெடிப்பில் 27 பேர் பலி
ஈராக்
தலைநகர் பாக்தாதில்
நேற்று சனிக்கிழமை
நடைபெற்ற தொடர்
குண்டு வெடிப்பில்
27 பேர் உயிரிழந்தனர்.
ஷியா
பிரிவினர் வசிக்கும்
அபு தாஷிர்
பகுதியில் உள்ள
காவல் துறை
சோதனைச் சாவடி
மீது நடந்த
தற்கொலைப் படைத்
தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் என காவல்
துறை அதிகாரிகள்
தெரிவித்தனர். இதில் 19 பேர் காயமுற்றனர். உயிரிழந்தவர்களில்
நால்வர் காவலர்கள்.
இதையடுத்து,
பத்து நிமிடங்களுக்குள்
நகரின் பய்யா,
ஜிஹாத், காஸிமியா
ஆகிய பகுதிகளில்
நிகழ்ந்த மூன்று
குண்டுவெடிப்புகளில் 15 பேர் உயிரிழந்தனர்.
42 பேர் காயமடைந்தனர்.
மேலும், காஸிமியா
பகுதியில் பஸ்
நிலையம் அருகே காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர்.
15 பேருக்கு காயம் ஏற்பட்டது.
ஈராக்கின்
இரண்டாவது பெரிய
நகரான மொசூலை
போராளிகள் கைப்பற்றியுள்ள
நிலையில், தலைநகரைத்
தக்க வைத்துக்
கொள்ள அரசுப்
படைகள் மும்முரம்
காட்டிவருகின்றன. இந்நிலையில், பாக்தாதில் தொடர் குண்டு
வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
0 comments:
Post a Comment