உக்ரைனில் மலேசிய விமானம் மீது ஏவுகணை தாக்குதல்

295 பேர் பலி

விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 15 கி.மீ தூரம் வரை உடல்கள் தென்பட்டதாகவும், விமானம் முழுமையாக வெடித்து சிதறிவிட்டதால் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வரும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் பலியானதாக கூறப்படுகிறது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்மாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு எம்எச் 17 போயிங் 777 விமானம் நேற்று புறப்பட்டது. இதில், 280 பயணிகளும், 15 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்டு, உக்ரைன் நாட்டின் வான்வழியில் பறந்து கொண்டிருந்தது.
கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் மாகாணத்தின் ஷாக்டார்ஸ்க் நகரில் மீது விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென நொறுங்கி வீழ்ந்தது. இதில் விமானம் நடுவானில் சிதறி தீப்பிழம்பாக நொறுங்கியதாக கூறப்படுகிறது. விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் இராணுவத்துக்கும், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையே கிழக்கு உக்ரைனில் தற்போது பெரும் மோதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ரஷ்ய ஜெட் விமானங்கள், உக்ரைனின் எஸ்யு25 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தின. இதைத்தொடர்ந்து, மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இண்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள தகவலின்படி, விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 15 கி.மீ தூரம் வரை உடல்கள் தென்பட்டதாகவும், விமானம் முழுமையாக வெடித்து சிதறிவிட்டதால் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 22-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை உக்ரைனின் உள்துறை மந்திரியின் ஆலோசகர் அன்டன் ஹெராசென்கோ உறுதிப்படுத்தியுள்ளார்விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது.
இதற்கிடையேவிமானம் விழுந்த இடத்துக்கு அவசரகால மீட்பு குழுவினர் விரைந்தனர்விமானத்தை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்விமானத்தின் சேத பகுதிகளை உள்ளூர் மக்கள் பார்த்ததாகவும் அப்போது விமானத்தின் கருப்புப்பெட்டி ஒன்றை அவர்கள் கண்டெடுத்திருப்பதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி உக்ரைன் பிரதமர் எரிசெனி யட்செனிக் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


















0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top