ஹமாஸ் இயக்க தலைவர் வீடு மீது இஸ்ரேல் குண்டு வீச்சு
மகன், மருமகள், குழந்தைகள் பலி
இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 360 தாண்டியுள்ளது


காஸாமுனையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும், 14 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையேயான பகைமை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விசுவரூபம் எடுத்துள்ளது. ஹமாஸ் போராளிகள் ஆட்சி செய்து வருகிற காஸாமுனை மீது இஸ்ரேல் கடந்த 8 ஆம் திகதி முதல் போர் விமானங்கள் மூலம் குண்டுமழை பொழிந்து
பதிலுக்கு இஸ்ரேல் நகரங்கள்மீது ஹமாஸ் போராளிகள் தொடர்ந்து ராக்கெட் வீச்சு நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சண்டையில் அப்பாவி பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை  360 தாண்டியுள்ளது
இதற்கிடையே காஸா நிலவரம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, காஸாமுனை மீதான தரைவழி தாக்குதலை குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவுபடுத்துவதற்கு இராணுவத்திற்கு உத்தரவிட்டார். போர் நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் போராளிகள் ஏற்காததையடுத்துத்தான் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேல் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்துவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

காஸாமுனையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தரைவழி தாக்குதலில் மேலும், 14 பாலஸ்தீனர்கள் பலியாகினர் என்று மருத்துவ தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. ஹமாஸ் போராளிகள் தொடர்ந்து ராக்கெட் வீச்சு நடத்தி வருகின்றனர். காஸாவில் ஹமாஸ் தீவிரவாத இயக்க தலைவர் வீட்டின் மீது இஸ்ரேல் இராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் பலியாகினர். ஹமாஸ் தலைவர் காலீல் அல் ஹய்யாக் மகன், ஒசாமா அல் ஹய்யக், அவரது மருமகள், அவர்களது குழந்தைகள் இந்த தாக்குதலில் பலியாகினர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. காஸாவின் முக்கிய பகுதிகளை இஸ்ரேல் இராணுவம் சுற்றியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top