பலியான பொதுமக்களின் எண்ணிக்கை 583-ஆக அதிகரிப்பு;

இஸ்ரேல் இராணுவ வீரர்கள் 27 பேர்


 ஹமாஸ் தாக்குதலால் கொல்லப்பட்டனர்

கடந்த 2 நாட்களாக நடந்த சண்டையில் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் 27 பேர் ஹமாஸ் தாக்குதலால் கொல்லப்பட்டனர். கடந்த 3 வாரங்களாக நடந்து வரும் சண்டையில் முதல் முறையாக இப்போதுதான் இஸ்ரேல் இராணுவத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு உள்ளது. இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாகுவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
காஸா முனைப்பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நாடத்திய தாக்குதலில் பலியான பொதுமக்களின் எண்ணிக்கை 583 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் 3600 தாண்டியுள்ளனர். இதனிடையே, காஸா மீதான தாக்குதலை நிறுத்தப்போவது இல்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காஸா முனை அந்த நாட்டின் ஹமாஸ் போராளிகள் வசம் உள்ளது. இவர்கள் அண்டை நாடான இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதி இஸ்ரேல் இராணுவத்துக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.
இச் சண்டை தற்போது, இரு நாடுகளுக்கு இடையேயான போர் போல தீவிரமடைந்து இருக்கிறது. இஸ்ரேல் இராணுவம் காஸா பகுதியில் வான்வெளி மற்றும் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லைக்குள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த சண்டையில், இதுவரை பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் அப்பாவி பொதுமக்கள் 5583 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3600 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இது தவிர இலட்சக்கணக்கன பொதுமக்கள் உயிர் பிழைப்பதற்காக பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதனிடையே, கடந்த 2 நாட்களாக நடந்த சண்டையில் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் 27 பேர் ஹமாஸ் தாக்குதலால் கொல்லப்பட்டனர்.
இது தவிர, இஸ்ரேல் இராணுவத்துடன் இணைந்து சண்டையிட்ட அமெரிக்க பிரஜைகளான மாக்ஸ் ஸ்டெய்ன்பெர்க், நிசிம் சீன் கார்மெலி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. அதேபோல், காஸா முனைப் பகுதியில் மட்டும் 100–க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
இரு தரப்புக்கும் இடையே கடந்த 3 வாரங்களாக நடந்து வரும் சண்டையில் முதல் முறையாக இப்போதுதான் இஸ்ரேல் இராணுவத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு உள்ளது. இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாகுவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் கூறுகையில், ‘‘இஸ்ரேல் இராணுவ வீரர்களின் உயிர் இழப்பு, மிகவும் வேதனையானது. கடினமானதும். சண்டையில் வீரமரணமடைந்த எங்களது மகன்களுக்காக தலை வணங்குகிறேன். எனவே சண்டையை நிறுத்த மாட்டோம். எங்களது தாக்குதல் தொடர்ந்து நடக்கும்’’ என்றார்.
இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைவதற்காக எல்லையோர பகுதிகளில் ஹமாஸ் போராளிகள் அமைத்துள்ள ஏராளமான சுரங்கப் பாதைகளை மூடும் விதமாக தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பாலஸ்தீன அதிபர் முகமூத் அப்பாசை .நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கத்தார் நாட்டில் நேற்று சந்தித்து, இரு தரப்புக்கும் இடையேயான சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது காஸா பகுதியில் பொதுமக்களின் உயிர்ச் சேதத்தை தடுக்கவும், ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்வதை தவிர்க்கும் வகையிலும் உடனடியாக சண்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பாசை, அவர் வலியுறுத்தினார்.














0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top