60 ஆவது பிறந்தநாளில்
பிரான்ஸ் ஜனாதிபதி
42 வயது நடிகையை
மணக்கிறார்.
பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி தனது 60 ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். அப்போது,
2 குழந்தைகளுக்கு தாயான 42 வயது நடிகை ஜூலி கெய்ட்டை திருமணம் செய்துக் கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலண்டே, தனது
முன்னாள் சுற்றுச்சூழல்
அமைச்சர் செகொலேன்
ராயலுடன் குடும்பம் நடத்தினார்.
இத்தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
ஆனால், திடீரென
செகோலேனைப் பிரிந்த அதிபர், பத்திரிகையாளரான வேலரி
ட்ரையெர்விய்லெர் (வயது 49) என்பவருடன் ஜனாதிபதி மாளிகையான
‘எலிசீ பேலஸ்'சில் சில
ஆண்டுகள் சேர்ந்து
வாழ்ந்தார்.
ஆனால்,
அவருடனும் பிராங்கோயிஸுக்கு
கருத்து வேறுபாடு
ஏற்பட்டது. இதனால், ஜனாதிபதி மாளிகையை விட்டு
வெளியேறிய வேலரி
ட்ரையெர்விய்லெர், ஒரு வாரத்துக்கு
பிறகு பிராங்கோயிஸ்
ஹாலண்டே-வை
பிரிந்து விட்டதாக
அறிவித்தார்.
இந்நிலையில்,
பிரெஞ்சு சினிமா
மற்றும் தொலைக்காட்சி
தொடர்களில் நடித்த பிரபல நடிகையான ஜூலி
கெய்ட்டும், ஜனாதிபதியும் காதலிப்பதாக தகவல் வெளியானது.
ஆரம்பத்தில், இத்தகவலை ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலண்டே
தரப்பு மறுத்தது.
ஆனால், கடந்த
வாரம் செய்தியாளர்களின்
கேள்விக்கு இது தொடர்பாக நேரடியாக பதிலளித்தார்
பிராங்கோயிஸ் அப்போது,
‘ஏதும் முக்கியமான
தகவல் இருந்தால்,
உங்களுக்கு நிச்சயம் தெரிவிப்பேன்' என அவர்
உறுதியளித்தார்.
இந்நிலையில்,
பிராங்கோயிஸ் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம்
திகதி தனது
60 ஆவது பிறந்த
நாளை கொண்டாடவுள்ளார்.
அப்போது, 2 குழந்தைகளுக்கு தாயான 42 வயது நடிகை
ஜூலி கெய்ட்டை
திருமணம் செய்துக்
கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள்
முழுவீச்சில் நடப்பதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment