இப்படியும் தீர்ப்பு! 


புகை பிடித்து புற்றுநோயால் ஒருவர் மரணம்
குடும்பத்திற்கு 23 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க
சிகரெட் நிறுவனத்திற்கு உத்தரவு

சிகரெட் புகைத்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு, சிகரெட் நிறுவனம் 23 பில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அமெரிக்காவின் ப்ளோரிடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பென்சகோலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிந்தியா ராபின்சன். இவருடைய கணவர் சிகரெட்டுக்கு அடிமையாகி தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர். ஒரு நாளைக்கு 3 பாக்கெட் என தனது 13ஆவது வயதில் இருந்து தொடந்து  20 வருடங்கள் புகைப்பிடித்த இவர் 36 ஆவது வயதில் புற்றுநோயால் உயிரிழநதார். இதனயைடுத்து தனது கணவர் உயிரிழந்ததற்கு ஆர்ஜே ரெனால்ட் சிகரெட்டே காரணம் என்றும், அந்நிறுவனம் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த புளோரிடா நீதிமன்றம், புகைப்பிடித்து உயிரிழந்தது இயற்கைக்கு மாறான மரணம் என்றும் இதற்கு காரணமான  ஆர்ஜே ரெனால்ட்ஸ் சிகரெட் நிறுவனம், உயிழந்தவரின் குடும்பத்திற்கு 23 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இது குறித்து மனுதாரர் சிந்தியா ராபின்சானின் வழக்குரைஞர், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அமெரிக்க மக்கள் கெமிக்கல் மற்றும் சிகரெட்  புகைக்கும் பழக்கத்தை நிறுத்துவது குறித்து, அமெரிக்க அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளது என்றார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top